Author Topic: படித்ததில் சிரித்தது 😄😄  (Read 3263 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226929
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/



படித்ததில் சிரித்தது 😄😄

ஒரு சிறுவன் ஒரு முடிதிருத்தும் கடைக்குள் நுழைந்தான். அப்போது அந்த கடைக்காரர் அங்கிருந்த வாடிக்கையாளரிடம் மெதுவாகச் சொன்னார்

“இந்த உலகிலேயே இவன்தான் மிக முட்டாள் குழந்தையென்றும் அதை இப்போது நான் உங்களுக்கு நிரூபிக்கிறேன் என்று.

அந்த கடைக்காரர் ஒரு கையில் 5 ரூபாய் நாணயத்தையும் மறுகையில் 2 ரூபாய் நாணயத்தையும் வைத்துக்கொண்டு அந்த பையனை அழைத்து உனக்கு எது ‌வேண்டும் என்று கேட்டார்?.

அந்தப் பையன் 2 ரூபாயைப் பெற்றுக்கொண்டு சென்றான். அந்த கடைக்காரர் சொன்னார் "பார்த்தீர்களா, இவன் முன்னேறப் போவதேஇல்லை" என்று.

கடைக்காரர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தினமும் அந்த பையன் கடைக்கு வரும் போதெல்லாம் இப்படி காசை தந்து கிண்டல் செய்து வந்தார்.

கடையிலிருந்து சென்ற அந்த வாடிக்கையாளர் அந்தப் பையன் ஒரு ஐஸ்கீரிம் கடையிலிருந்து வருவதைக்கண்டார்.

அவர் அவனிடம் சென்று ஒரு கேள்வி கேட்கலாமா என்று ‌கேட்டு ஏன் 5 ரூபாய்க்கு பதில் 2 ரூபாயை பெற்றுக்கொண்டாய்? என கேட்டான்.

ஐஸ்கிரீமை நக்கிக்கொண்டே ‌ அந்த பையன் “என்றைக்கு நான் அவரிடம் 5 ரூபாயை எடுக்கிறேனோ அன்றோடு எனக்கு இந்த பணம் கிடைப்பதே நின்றுவிடும்" என்றான்.

கதையின் நீதி: எப்பொழுது நீ மற்றவர்களை முட்டாள் என்று எண்ணுகிறாயோ அப்போது நீ உன்னையே முட்டாள் ஆக்கிக் கொள்கிறாய்.