Author Topic: சிறந்த எழுத்தாளன் ஆவது எப்படி? எட்டு கட்டளைகள்.  (Read 1851 times)

Offline MysteRy

சிறந்த எழுத்தாளன் ஆவது எப்படி?
எட்டு கட்டளைகள்.





1 முதலில் நிறைய படி.

2 எழுதுவதற்கு"மூடு "வருவதற்காகக் காத்திருக்காதே.

3 உண்ணும் சோறும் பருகும் நீரும் போல எழுத்து நமது அன்றாட நிகழ்வாக இருக்க வேண்டும்.

4  மொழியைப் பிழையின்றி எழுத கற்றுக்கொள். அப்போதுதான் அலாவுதீன் பூதம் போல மொழி நமக்கு கீழ்ப்படிந்து ஏவல் செய்யத் தொடங்கும்.

5 நீ எழுதியதை உனக்குத் தெரியாத யாரோ ஒருவன் எழுதியது போல எடுத்துப் படி. நாம்தான் எழுதினோமா என்று சந்தேகம் வரும் போது நீ வளர்கிறாய் என்று தெரிந்து கொள்.

6 நீ எழுதியவற்றை உடனுக்குடன் படித்து கருத்து சொல்வதற்கு உன் மேல் பொறாமைப்படாத ஒருவன் அல்லது ஒருத்தியைக் கண்டுபிடித்து வைத்துக்கொள்.

7 தினமும் மரம், மட்டை, குளம், குட்டை, ஆண்கள்,பெண்கள், எருமைகள் என்று எல்லாவற்றைப் பற்றியும் உன் மனதில் கனியும் தூய எண்ணங்களை பயப்படாமல் எழுது.

8 கடைசியாக ஒரு எச்சரிக்கை: எழுத்து என்பது தவம் என்றும், அது தானாக உன்னிடமிருந்தே நிரம்பி வழிய வேண்டும் என்றும், ஒரு மலர் மலர்வது போல ஒரு செடி வளர்வது போல எழுத்து உன்னிடமிருந்து தானாகத் தோன்ற வேண்டும் என்றும் பேசுபவர்களை தூரத்தில் வை. இவை எல்லாமே மாயைகள். இப்படிப் பேசுபவர்கள் எழுத்தை ஒரு புனிதப் பிரதேசத்துக்கு கடத்திச்சென்று காணாமல் அடித்து விடுவார்கள். எனவே எழுத்தை மேட்டிமைப்படுத்தாமல் அன்றாட வாழ்க்கை போல் தினந்தோறும் எழுது.

படித்ததில் பிடித்தது பயனுடையது.. 📖🌹

« Last Edit: October 03, 2024, 10:51:19 AM by MysteRy »