Author Topic: நாம் யாரோ ?  (Read 1367 times)

Offline AgNi

நாம் யாரோ ?
« on: September 03, 2024, 12:27:30 PM »


நீ யாரோ நான் யாரோ ஆனப்பின்
என்ன பந்தம் இருக்க போகிறது!

நமக்குள் பேச்சுவார்த்தை என்பது
நாடக நல விசாரிப்புகளே  !

கடந்த கால கனவுகண்ணாடிகளில்
இன்றைய நிஜங்கள் பதிந்திருக்க நியாயமில்லை !

நமது நேற்றும் இன்றும் வாழ்தலின்
உதிரியாக சிதறி கிடக்கின்றன !

இந்த இருளுக்கும் உனக்கும்
என்ன சம்பந்தம் ?

காலக்கனலின் சூட்டிலிருந்து தப்பித்து
விடியல் வானம் ஏங்குகிறேன் !

வெறிச்சோடி கிடக்கும் நினைவுச் சோலைக்குள்
தூரத்து கானல்நீராய் நீ !

உன் நினைவுகளின்று  என்னை பிரித்தெடுக்க
இன்னும் எத்தனை யுகங்கள்
காத்திருக்க வேண்டுமோ?





Offline Ishaa

Re: நாம் யாரோ ?
« Reply #1 on: September 09, 2024, 11:25:59 PM »
Migavum aartham ulle Kavithai AgNi sis. ❤️❤️❤️

உன் நினைவுகளின்று  என்னை பிரித்தெடுக்க
இன்னும் எத்தனை யுகங்கள்
காத்திருக்க வேண்டுமோ?

Unga Kavithaiyil enakku migavum piditha kelvi.
Bathil illa oru kelvi.