Author Topic: கிறுக்கல்கள் 4  (Read 1501 times)

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1445
  • Total likes: 3058
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen
கிறுக்கல்கள் 4
« on: August 22, 2024, 11:47:51 PM »
கிறுக்கல்கள் 4

கத்தி கொண்டு வீசினாலும்
மீண்டும் உன்னை நோக்கி வரும்
இம் மனதினை கேட்டேன் மெல்ல
வெட்கம் இல்லையா என்று
 
அவரை நேசிக்க மட்டுமே உரைத்தாய்
இன்னும் வெறுக்க நினைய வில்லையே
என்றது ஏளனமாக
 
உனக்கென எழுதிய கவிதைகள்
தூரமாய் நின்று ஏங்க
பேசி சென்ற சாலைகள்
வஞ்சகமாய் வசை பாட
காதலின் பிரிவை விட  - உடன் இருந்த
 நட்பின் பிரிவு மன பாரத்தை கூட்ட

இருந்தும் வேண்டுகிறேன்
என்றும் நல்ல சுற்றமும்
உனக்கு பிடித்த நட்பும் சூழ
சுகமாய் வாழ்வாய் நண்பனே 

நினைவுகளோடு  வாழ பழக்க பட்டவள்
  பட்டவள்
இனி நீயும் என் அழகிய  நினைவாக..

கடல் தாண்டி கண்ட சொந்தம்
 இனி என்றும் கணவாய் போகும் பந்தம்

« Last Edit: August 24, 2024, 11:54:55 AM by Vethanisha »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1230
  • Total likes: 4162
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: கிறுக்கல்கள் 4
« Reply #1 on: August 23, 2024, 03:40:19 PM »
குறுஞ்செய்தி எல்லாம் அப்போதில்லை
நேராக அவளின் புன்சிரிப்பிற்காகவே
பல நேரம் பேசிக்கொள்வோம்
பேசியது, பகிர்ந்து எல்லாம் அன்றாட
வாழ்வின் நிகழ்வுகளாகவே
இருக்கும் ஆதலால்

பிரிந்தபின்
அன்றாடம் நாம் கடக்கும்
ஒவ்வொரு விஷயமும்
அவர்களின் நினைவுகளை
தூவி செல்கிறது

என்ன செய்ய
பிரிதல் நாம்
வேண்டியதல்ல

வேண்டியது கிடைக்க
வரமும் நாம்
வாங்கவில்லை

வலி என்பது
காதலுக்கு மட்டுமல்ல
நல்ல மனது இருபவருக்கே
உணரக்கூடியது

உணர்வோம்
உயிராய்
உணர்வோம்

********

நல்ல கிறுக்கல் நண்பியே
நட்பில் ஏது வெட்கம் மானம்  ரோஷம்
சர்வமும் நட்பென்றோ !  :D :D :D

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "