Author Topic: எங்கே சென்றாய் நீ 4  (Read 842 times)

Offline Mr.BeaN

எங்கே சென்றாய் நீ 4
« on: August 10, 2024, 03:56:55 PM »

வானை ஆரத்தழுவி
வையகத்தை அரவணைத்து
காலை கதிர்வீசசால்
பயம் கவலை மறக்க வைத்து
மாலை நேரத்தில்
மங்குகிற ஞாயிறு போல்
அன்போடு அகம் வருடி
அளவளாவ புறம் அழைத்து
என்கதைகள் கேட்டு
இறக்கம் தான் பட்டு
சங்கதிகள் கூறி
என் கவலை மறக்க வைத்து
ஓர் நாளில் எல்லாம்
முடித்து விட்டோம் என்றெண்ணி
தமிழ் தொலைத்த உவளாய்
அவள் தொலைந்து போனால்.

கதிரவனும் போன பின்னர்
ஞாலத்திற்கு நிலவென்று
ஓர் உறவு உண்டென்று
ஓர் நாள் நீ புரிந்து
மீண்டும் வருவாய் என
மீளுகிறேன் தினம் நானே..
intha post sutathu ila en manasai thottathu..... bean