நில்லாமல் செல்லும் என் பாதை
எங்கும் நிற்காமல் செல்லும் என் கால்கள்
ஒன்றாக ஒன்றி இருந்து
எனை அழைத்து செல்லும் தருணம்
எங்கோ ஓரிடத்தில் சற்று
என்னை அறியாமல் நிற்கின்றேன்
கண் முன்னே நீரோட
நீர் பாதை எனை ஈர்க்க
சொல்லலே நான் வர்ணிக்க
இயலாத அந்த சூழலினால்
நிற்காத என் பயணம்
நிற்பதும் ஓர் அதிசயமே
கண் கண்ட காட்சியினால்
என் மனமோ மகிழ்ந்திருக்க
கண்களுக்குள் அதை புதைக்க
கொஞ்சம் நெருங்கினேன்
எந்தன் நெருக்கமும் அதை என்ன செய்ததோ
நானும் செல்கையில் அது எங்கோ தொலைந்ததே
ஏன் என ஒரு கேள்வி
எனக்குள் நானே கேட்க
விடை தெரியாத கேள்வியே
ஓர் விடையென நான் கண்டேனே
காற்றில் கரையும் காணல் நீரும்
என் கவிதை ரசித்த பெண் நீயும்
ஒன்றென நானும் உணர்கையிலே
பொங்கி பெருகுதென் கண்ணீரும்