Author Topic: நீ வருவாய் என 4  (Read 801 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
நீ வருவாய் என 4
« on: July 02, 2024, 05:52:41 PM »
கண்டும் காணாமலே
கேட்டும் கேட்காமலே
ஒரு நிலையில் நீ இருக்க
உன் நினைவில் நான் இருக்க ..

கண்கள் மூடாமலே
கனவும் நிற்காமலே
களவாடி போன உன்னை
காணத்தான் வருகிறேனே...

என் இதயம் உன்னிடத்தில்
தந்த பின்னே நானும் மெல்ல
உன்னாலே இதயமது
துடிக்குமே என்றிருந்தேன்..

ஏந்தானோ என்னை நீ
தூக்கி வீசி போன பின்னர்
துடிக்காத இதயத்தை
வைத்து நானும் என்ன செய்ய

உன்னோடு நான் இருந்த
சில காலம் என்னுள்ளே
உயிராக இன்றும்
ஓடித்தான் கொண்டிருக்க..

ஒரு நாளில் எனை புரிந்து
வருவாயா என் உயிரே
உன்னைத்தான் உயிரெனவே
எண்ணுகிறேன் நானுமிங்கே
intha post sutathu ila en manasai thottathu..... bean