Author Topic: நீ இன்றி நான்..  (Read 929 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
நீ இன்றி நான்..
« on: July 02, 2024, 05:46:39 PM »
அன்பே அழகே ஆருயிர் நீயே
என்றே கொஞ்சிய நாட்களிலே
என்னை நீங்கா நீயும் உயிராய்
என்னுள் தானே இருந்திட்டாய்
இன்றோ நீயும் உந்தன் மனதை
ஏனோ மாற்றி செல்கையிலே
உள்ளே அழுகும் எந்தன் மனமோ
ஊமை ஆகி போனதடி

உன்னை நீங்கி ஒரு நொடியேனும்
இருந்திட முடியா நிலையினிலே
இருக்கிற போது என்னை நீங்கி
செல்வதும்தானே நியாயமென - நீ
இருந்தால் நானும்.இறப்பேன் என்றே
சொல்லிட எனக்கும் தோன்றவில்லை
உந்தன் நினைவோ எந்தன் நாட்களை
கடத்தும் என்பதை புரிந்திடடி...
intha post sutathu ila en manasai thottathu..... bean