மூங்கில் துளையினிலே
புகும் காற்று இசையாகி
தருமே ஒரு ஓசை
அதுதானே இனிதெனினும்
மூங்கில் தோட்டமதில்
காற்றும் தான் மிதமாக
நுழைந்த பின்னர் வரும்
ஓசை தான் இசைக்கீடா
அஃதே என்னிடத்தில்
யார் வந்து பேசிடினும்
உந்தன் காதலுக்கு
ஒரீடு ஆகாதே
உன் மேல் நான் கொண்ட
உயிற்க்காதல் தான் அன்பே
என்றும் என் நெஞ்சில்
நீங்கித்தான் போகாதே...