Author Topic: கொல்ல விருப்பமில்லை !  (Read 1050 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1287
  • Total likes: 4478
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
கொல்ல விருப்பமில்லை !
« on: June 29, 2024, 07:07:09 PM »
உன்னை கொல்ல
விருப்பமில்லை
நீ ஒழுக்கத்தின்
உதாரணம்

உன்னை கொல்ல
விருப்பமில்லை
நீ உழைப்பின்
சிகரம்

உன்னை கொல்ல
விருப்பமில்லை
நீ சேமிப்பதில்
எடுத்துக்காட்டு

உன்னை கொல்ல
விருப்பமில்லை
நீ முயற்சியின்
முன்னுதாரணம்

உன்னை கொல்ல
விருப்பமில்லை
நீ உன் துணை மேல்
அன்பானவன்

உன்னை கொல்ல
விருப்பமில்லை
ஆனால்
அறியவிரும்புகிறேன்
உன்னை இப்படி
வாழ கற்றுத்தந்தது
யாரோ !?

எறும்பே!
எதுவாயினும்
உன்னை கொல்ல
விருப்பமில்லை


****JOKER****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "