Author Topic: GAB பிறந்தநாள் வாழ்த்து  (Read 703 times)

Offline SweeTie


அன்புத்தோழன்   GAB  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்புக்கோர் அடையாளம் 
ஆழ்ந்த   சிந்தனையும்  அறிவும்
இமயம் போல்   நெஞ்சுறுதி
ஈர்க்கும்    சக்தி கொண்டான்
உரிமையும்  உணர்வுகளும் 
ஊடறுக்கும்  இவன் பேச்சில்
எங்கும் எதிலும்  தன்னடக்கம்
ஏற்றம்  தாழ்வு   காட்டாது
ஒருங்கிணைத்து   
ஓதுவது  இவனையன்றி
 யாரும் உளரோ? 

என்றென்றும் அதே இளமையுடன்  இனிதே வாழ மனம் நிறைந்த
இனிய  பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!!   
« Last Edit: June 10, 2024, 01:44:11 AM by SweeTie »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1074
  • Total likes: 3613
  • Total likes: 3613
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: GAB பிறந்தநாள் வாழ்த்து
« Reply #1 on: June 10, 2024, 01:30:02 PM »
FTC  என்னும்
நண்பர்களுக்கான கதவுகள்
என்றும் திறந்திருக்க
GAB என்னும் மூன்றெழுத்தின்
மூச்சும் ஓர் காரணம்

பேசியதில்லை அதிகம்
பழகியதில்லை இவருடன்
அன்பு ,பாசம், நட்பு,
வெறுப்பு,ஆசை எனும்
உணர்வுகளை எல்லாம்
ஓரமாய் வைத்து நட்பிற்காய்
ஒரு தளம் அமைத்து
12+ வருடங்களாய்
ஓடி வரும் நண்பா


இறைவன் நீ விரும்பும்
வாழ்வு தர
பிரார்த்திக்கிறேன்

WISH YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY
GOD BLESS YOU

***

SweeTie உங்கள் வாழ்த்து கவிதை அருமை நன்றி


****JOKER****


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Ishaa

Re: GAB பிறந்தநாள் வாழ்த்து
« Reply #2 on: June 10, 2024, 11:24:20 PM »
பல கண்டம் தாண்டி

பல ஊர்கள் தாண்டி

ஆயிரமாயிரம் தமிழர்களை

13 வருடமாய் இணைக்கும்

FTC க்கு மிகப்பெரிய பக்கபலமாய் இருக்கும்

GAB' க்கு என் சார்பாக

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .
நீண்ட ஆயுளுடனும்,
என்றும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும் எப்போதும் சுகமாய் இருக்க வாழ்த்துகிறேன்.

இப்படி ஒரு அரட்டை அரங்கம் உருவாக்கியதற்கு நன்றிகள் Gab..

அழகிய வரிகள் Sweetie Sis & Joker 😊
« Last Edit: June 10, 2024, 11:29:16 PM by Ishaa »