Author Topic: மயக்கம்  (Read 864 times)

Offline Symphony

மயக்கம்
« on: May 06, 2024, 06:52:29 PM »
மயக்கம்
உன் பூ முகம்கண்டு ஆச்சர்யம் கொண்டேன்! , உன் வளைப் புருவங்கள் எனை நாணல் போல் வளைக்கிறது!
உன் முத்து உதிரும் புன்சிரிப்பில் என் அகமும் மலர்ந்தேன்! உன் விழிகளின் ஈர்பில் மயங்கி! உன் விழிகளில் ஆயிரம் ஆயிரம் மௌனமொளி பேசுகிறது ரகசியமாய் மிக ரகசியமாய் என் செவிகளுக்குள்ளே ரம்மியமான இனிய மெல்லிசையாய் தேன் வந்து பாய்கிறது!
இன்னிசை யாழ்மிட்டும் உன் வளைக்கரங்கள் பற்றிட நானும்!
உன் கொடியிடையின் அசைவுகள் என் இமைக்கா நொடிகள்!
உன் தங்கரத கால் அடிகள்
என் மேல் பதிந்திட!
தரையில் விழும் சருகென கிடக்கிறேன் நாளும் உன் வரவுக்காக !
காத்திருக்கும் உன் ராஜூ(symphony)