Author Topic: உடல் பருமன் சுட்டு (Body Mass Index)  (Read 1065 times)

Offline kanmani

உடல் பருமன் சுட்டு (Body Mass Index)


உடல் பருமன் சுட்டு எண் (Body Mass Index) என்பது ஒருவரது எடை எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறிய உதவும் ஒரு உத்தேச கணக்கு முறை. ஒருவரது உயரத்தையும் அவரது எடையையும் கொண்டு அவரது உடல் பருமன் சரியான அளவில் உள்ளதா என்பதை இதன்மூலம் கண்டறியலாம். அதிக எடை என்பது அதிகப்படியான கொழுப்பு சத்தினால் உண்டாவது. இந்த உடல் பருமன் சுட்டு மூலம் ஒருவரது உடலில் உள்ள கொழுப்புச் சத்தினை நேரடியாக கணக்கிட முடியாது. இருப்பினும் அவரது உடலில் அதிகப்படியான கொழுப்பு சத்து உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

உங்கள் எடை ஆரோக்கியமானதா? உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையை நீங்கள் கொண்டுள்ளீர்களா? என்பதை இந்த உடல் பருமன் சுட்டு கணக்கீட்டின் மூலம் நீங்களும் அறிந்துகொள்ளலாம்.


     
உடல் பருமன் சுட்டு எண்    

சுட்டு எண்    உடலமைப்பு                          ஆரோக்கிய குறைவிற்கான வாய்ப்புகள்

<18.5            குறைவான எடை                  நடுநிலை

18.5-24.9         ஆரோக்கியமான எடை            குறைவு

25-29.9           அதிக எடை                            அதிகம்

30-34.9           மிகவும் அதிக எடை               மிகவும் அதிகம்

>35                   மிக மிக அதிகப்படியான எடை    மிக மிக அதிகம்

« Last Edit: April 12, 2012, 05:15:43 PM by kanmani »