Author Topic: நீர்வழிப்படூஉம் புணை...  (Read 787 times)

Offline Maran

நீர்வழிப்படூஉம் புணை...
« on: January 11, 2024, 02:13:17 PM »


ஆயத்தங்கள்
மதிப்பீடுகள்
சாதுரியமான திட்டமிடல்கள்
அனைத்தையும் அலட்சியப்படுத்தி
தன் போக்கில் நகர்கிறது வாழ்க்கை
வெகு இயல்பாய்....

நிர்மாணிக்கப்படாத மேடைகளில்
ஒத்திகை பாராத காட்சிகள்
சுவாரஸ்யம் கூட்டுகின்றன
அடி நாவில்!

நேற்றைய சாயல்கள் மாறாத
இன்றுகளின் அரங்கில்
அதோ பார்வையாளர் வரிசையில்
நானும் இருக்கிறேன்
கன்னத்தில் கை வைத்து
நகம் கடித்தபடி...