Author Topic: என்னோடு நீ இருந்தால் !  (Read 961 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1220
  • Total likes: 4128
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
என்னோடு நீ இருந்தால் !
« on: January 08, 2024, 07:52:56 PM »
பூக்கள் நிறைய
பூக்கும்
ஆனால்
குறிஞ்சி பூ
பனிரெண்டு வருடங்கள்
எடுக்கிறது
பூக்க

அதுபோல தான்
வாழ்வில்
நட்புக்கள் பல
பூக்கும்
ஆனால்
அவளுடனான என்
நட்பு
வாழ்க்கையில்
ஒரு முறை மட்டும்
பூக்கும்

பேச துவங்கிய பின்
வார்த்தைகள் என்றும்
எல்லையில்லா வானம் போல
முற்றுப்புள்ளி வைத்ததில்லை

மௌனங்கள்
ஏங்கும் நம்
உரையாடலை கண்டு

கனமான இதயம்கூட
இலகுவாகி போகும்
உன்னுடன் பேசுகையில்

பல நேரங்களில்
குழப்பத்தில் மூழ்க
விடையாய்
என் எதிரில்
நீ இருப்பாய்

தோள் கொடுப்பான் தோழன்
சொன்னவன்
உன்னை போல்
ஒருத்தியை கண்டிலர் போலும்
இல்லையேல் தோழி
என மாற்றியிருப்பான்

உன்னோடு இருக்கும்
நேரங்களில்
வாழ்க்கை அழகு தான்

தொட்டு விடும் தூரத்தில்
நீ இல்லை
இருந்தும் உன்னை விட்டுவிடும்
எண்ணத்தில் நானுமில்லை

நீ என்
இதயத்தில் இணைந்துவிட்டதால்
கலந்துரையாடல்கள்
அனாவசியமாகி
கவிதையாய் மாறிக்கொண்டிருக்கிறது

மனது நிறைந்தால்
சில நேரம் சிரிப்போம்
சில நேரம் அழுவோம்
இரண்டையும் ஒரு சேர தருவதில்
நீ கில்லாடி

வேண்டுவதெல்லாம்
மீண்டும்
ஓர் நெடுந்தூர
பயணம்
உன் கை கோர்த்து
இவ் வாழ்வில்
இவ்வாழ்வை
ரசிக்க

***Joker***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "