Author Topic: மழை வெள்ளம்  (Read 761 times)

Offline Mr.BeaN

மழை வெள்ளம்
« on: December 20, 2023, 11:38:56 AM »
பேய் மழையே

நீர் செல்லும் பாதையை மேடாக்கி
அதையும் பின்னாளில் வீடாக்கி
தடை போட்டு தடுத்த மனிதன்
தலையில் கொட்டு வைக்க
தவறாமல் வருடத்தின் இறுதியில்
தாக்கிடுவாய் சென்னையை

கான்கிரீட் காடான அங்கே
கொட்டி தீர்த்து நீயும் தங்க
பித்து பிடித்து அவர்கள் புலம்ப
பின்னர் மன்னித்து நீ கிளம்ப
வருடந்தோறும் இதை கண்டோம்
வருத்தமின்றி தானே கடந்தோம்

இந்த முறை என்ன ஆச்சு
நெல்லையில் உன் ஆட்சி
நீயும் தான் வந்த பின்னே
உன்னை பற்றி தான் பேச்சு
மண் மேலே பாசம் வச்சு
மக்களையும் தான் மதிச்சு
ஆதாரம் என இருந்த - நீ
சேதாரம் செஞ்சிட்டியே
பேயாக நீ அடிக்க
பயந்து நெல்லை துடிக்க
பார்த்ததுதான் கவலையில்
என் கண்ணும் நீர் வடிக்க
என்னதான் கோவமென
கேக்கதான் தோணுதம்மா
யாருகிட்ட நான் கேப்பென்
எதுவும் புரிய வில்லையம்மா

கடவுள் கிட்ட முறையிடத்தான்
கை கூப்பி நான் நின்றேன்
கடவுளோ என்னிடத்தில்
என்ன குறை என கேட்டார்
மழை பேஞ்சு மக்களெல்லாம்
தவிப்பதையே நான் சொல்ல
அதன் பாதை ஏன் அடைச்ச
என திருப்பி அவர் கேட்டார்

என்ன பதில் சொல்லுறது
என்று எதும். விளங்காம
அறிவாளி பெருமையெல்லாம்
அடகு வச்சு நிக்கிறேனே

என்ன குறை இருந்தாலும்
எங்க கிட்ட சொல்லு நீ
தீர்த்து தானே வைக்கிறோம்
கொஞ்சம் தயவு செஞ்சு செல்லு நீ

(நம் பேராசைக்கு ஆட்பட்டு இயற்கையின் பாதைகளை பயணங்களை மரித்தால் இது போல இன்னும் அதிகமான விளைவுகளை சந்திக்க நேரிடும். )
எச்சரிக்கையுடன் இருப்போம்
இயற்கையை மதிப்போம்
intha post sutathu ila en manasai thottathu..... bean