Author Topic: காதல் கொண்டேன்  (Read 977 times)

Offline Mr.BeaN

காதல் கொண்டேன்
« on: December 19, 2023, 05:44:56 PM »
நெற்றி முடி திருத்தி
சுற்றி வரும் ஒருத்தி
சட்டெனவே சென்றால்
விழியில் என்னை கடத்தி

சித்திரத்தை போலே
அத்தனை அழகாய்
முத்தமிடும் விழிகள்
சிறைக்கம்பி ஆக

நந்தவன பூவாய்
சிந்துகிற சிரிப்பை
அந்தி நிலவொளியில்
சுந்தரியும் உதிர்த்த்தால்

அச்சிரிப்பை கண்ட
அக்கணம் முதலே
அவளிடத்தில் நானும்
காதல் கொண்டேனே

நான் தேடும் என்னை
அவளிடத்தில் கண்டேன்
தொலைந்ததும் ஓர் இன்பம்
என உணர்ந்து கொண்டேன்
intha post sutathu ila en manasai thottathu..... bean