அறிவியல் அறிவையே அறிந்திட
யாருமே
பொறியியல் படிப்பையே
படித்தனர் நாளுமே
பொறியியல் படித்துதான் வல்லுனர் ஆனவர்
பொறியியல் படிப்பதன் சிறப்பையே காட்டினர்
புறிந்துதான் பொறியியல் படித்தவர்
மட்டுமே
கருவிகள் செய்துமே
வாழ்வையும் மாற்றினர்
அன்றுதான் பொறியியல் படிப்பது என்பது
அத்தனை எளிமையே என்றுதான் இல்லையே
இன்றுமே பொறியியல் படிப்பவர்
சிலருமே
அறிவியல் அறிவுடன் படிப்பதும் இல்லையே
எத்துனை துறைகள் தான் உலகத்தில் உள்ளதோ
அத்தனை துறையிலும் வல்லமை
பெற்றிட
உற்றதாய் உலகிலே என்றுமே இருப்பது
பொறியியல் கல்வி போல் வேறெதும் இல்லையே
என்றுதான் அன்றுமே இருந்ததோர் கல்வியே
சந்தையில் பொருளென இன்றும் மலிவுமே ஆனதே
அத்துனை மதிப்புடன் இருந்த ஓர் கல்வியே
வர்த்தகம் ஆனதால் மதிப்பற்றும் போனதே
தற்குறி அரசியல் நடத்திடும் சிலரினால்
கல்வியும் வர்த்தகம் எனவுமே ஆனதால்
அறிவுடன் புரிந்துமே படித்திட
சிலருமே
கல்வியை பயின்றிட விழைவதும் இல்லயே
தொழில்முறை கல்வியாய் நமக்குமே இருந்தது
அடைமொழி தகுதியாய் மட்டுமே
இருக்குது
இந்நிலை பற்றி நான் என்ன தான் சொல்வது
கல்வியை தரத்துடன் கற்பதே நல்லது
(தோழி @focuss அவர்கள் கேட்ட தலைப்பு)