Author Topic: என் அம்மா  (Read 680 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
என் அம்மா
« on: November 14, 2023, 05:26:05 PM »

கருவிலே எனை வச்சு
கனவிலே உருவம் வச்சு
கண் மூடி தூங்காம
கன நாள் காத்திருந்து

உலகத்தை எனக்கு தந்து
உவகையில் மனமுவந்து
இரத்தம் பாலாக்கி
எனையும் பசியமத்தி

ஈன்ற நாள் முதலாய்
ஈ எறும்பு அண்டாம
பேணி வளத்திடவே
பேராசை கொள்வாலே

இரவில் நான் அழுதா
அவளும் முழிச்சுடவா
நேரம் காலம் எல்லாம்
தானே மறந்துடுவா

காலம் ஒடிடவே
நானும் வளந்து நின்னேன்
கனிவுடன் நல்லதையும்
எனக்கு சொல்லி தந்தா

கை வீசி பள்ளிக்குமே
தினமும் அழச்சி போயி
கல்வி நான் கற்க
கஷ்டத்தை அவ சுமப்பா

நெஞ்சை நிமிர்த்தி நட
நேர்மையா தினம் பேசு
அஞ்சி வாழாதே
என்றெல்லாம் சொல்லி தந்து

கூறு உள்ளவனா
வளக்க நெனசிருப்பா
சோறு நான் திங்க
முரண்டு பிடிக்கிறப்போ

பொய்யா கோவம் காட்டி
கொஞ்சம் முறைச்சு பாத்து
திட்டி சோறு தந்து
பின்னர் அழுதிடுவா

வீட்டு பாடம் எல்லாம்
தினமும் சொல்லி தந்து
தப்பு நன் செஞ்சா
தலையில் கொட்டும் வைப்பா

நானே உலகம் என்று
தினமும் சொல்லிடுவா
எனக்காய் தானே தினம்
சாமி கும்பிடுவா

சாமி.இல்லையென
நானும் சொல்லவில்லை
எல்லா சாமியுமே
நிக்குது என் கண் முன்னே

அடுத்த ஜென்மமுன்னு
ஒன்னு இருந்தாக்க
அவளை மகளாக்கி
என் கடன் தீக்கணுமே..



அன்பு மகன் திருவாளர் பீன்
intha post sutathu ila en manasai thottathu..... bean