Author Topic: நீ வருவாய் என 2  (Read 763 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
நீ வருவாய் என 2
« on: November 10, 2023, 01:21:26 PM »
சிரிப்பழகி நீதானே உனை
செந்தமிழில் புகழ்வேனே

கருத்தாக நீ பேச அத
மறுக்காம கேப்பேனே

பறிக்காத பூவாட்டம்
பசுமையாய் நான் இருந்தேனே

பட்டாசும் வெடிச்சது போல்
நீ போக வெடிச்சேனே

மனசுக்குள் நீதானே மயில்
போல வருடுனியே

மதி மயங்கும் பேச்சாலே
எம்மனச திருடுனியே

என் மனச நான் சொல்ல
எனை தானே சாடுனியே

என் பேச்சை கேட்காம
என விட்டும் ஓடுனியே

காத்து பட்டு கத்துகிற
புல்லாங்குழல் போல

நீயும் திட்ட எம்மனசும்
நிஜமாவே கதறுதுடி

புழுதிக்குள்ள பூங்கற்றா
சிக்கி நான் செதறுகிறேன்

உன்ன பக்க முடியுமானு
நித்தம் நித்தம் பதறுகிறேன்



அன்புடன் திருவாளர் பீன்
« Last Edit: November 12, 2023, 02:27:52 PM by Mr.BeaN »
intha post sutathu ila en manasai thottathu..... bean