Author Topic: இல்லத்தரசி...  (Read 670 times)

Offline Mr.BeaN

இல்லத்தரசி...
« on: November 08, 2023, 08:26:27 AM »
காலையில கண் முழிச்சு
எந்திரிக்க தோணவில்லை
ஆனாலும் எனக்கு இப்போ
வேற வழி ஏதுமில்லை

காப்பி தண்ணி குடிக்கிறியா
கேக்க ஒரு நாதியில்லை
காலையில காப்பி தண்ணி
பொடுறதே என் வேலை

கணவன் வேலைக்குமே
கிளம்ப நான் வேணும்
பிள்ளைகளை பள்ளி கூடம்
நானே கிளப்பிடனும்.

எறும்பை போல தினம்
சுறுசுறுப்பாய் நான் இருப்பேன்
சிற்பியிடம் கல் போல
வலியும் தாங்கி நிப்பேன்

மூணு வேலை பசியாற
உணவு நான் சமைப்பேன்
சில நேரம் பட்டினியா
ஏனோ தான் கிடப்பேன்

பள்ளி கூடம் அலுவலகம்
எல்லாமே விடுமுறைனு
பிள்ளையும் கணவனுமே
மகிழ்ச்சியா சொல்வாங்க

எனக்கும் அப்படி ஓர்
நாளு இருக்குமானு
நாள்காட்டி தாளை தினம்
கிழிச்சு தான் பாப்பேன்

போர்க்கால அடிப்படைனு
செய்தியில் ஒரு வார்த்தை
தினம் தினம் என் வீட்டில்
நிஜத்தில் நான் பார்த்தேன்

கஷ்டமுன்னு சொன்னாக்க
கேக்க ஒரு ஆளுமில்லை
கவலையில் இருந்தாலும்
தேற்ற ஒரு தோளுமில்லை

கஷ்டமுன்னு ஒரு நாளும்
கலங்கி நிற்க்கவில்லை
கவலைய ஒதுக்கி விட்டு
நான் பாப்பேன் என் வேலை.

என்ன வேலை செய்றீங்க?
யாராச்சும் கேட்டாக்கா
இல்லத்து அரசி !! என்று
பெருமையாய் நான் சொல்வேன்

இல்லத்து அரசி என்று
சொன்னதுமே சில பேரு
இதில் என்ன பெருமை என
ஏளனமும் செய்வாங்க

பரிகாசம் அவமானம்
எங்களுக்கு புதுசு இல்ல
பரிதவிச்சு நிக்குறோமே
வேறென்ன நாங்க சொல்ல?

குடும்பத்த காப்பாத்த
தினமும் விடுப்பு இன்றி
கஷ்டப்படும் மகளிர்க்கு
என் சமர்ப்பணம்🙏🙏🙏

அன்புடன் திருவாளர் பீன்
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1077
  • Total likes: 3618
  • Total likes: 3618
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: இல்லத்தரசி...
« Reply #1 on: November 08, 2023, 11:59:01 AM »
உண்மை  ...கவிதை,பல இல்லத்தரசிகளின் மன குமுறலின் பிரதிபலிப்பு

தொடர்ந்து எழுதுங்கள் சகோ

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Mr.BeaN

Re: இல்லத்தரசி...
« Reply #2 on: November 08, 2023, 12:36:52 PM »
நன்றி சகோ
உங்கள் வாழ்த்துக்கள் என்னை எழுத வைக்கும்
intha post sutathu ila en manasai thottathu..... bean