பேரண்டம் அதிலே
சிறு துண்டாய் உலகம்
தலை தூக்கி பார்த்தால்
பிரமாண்டம்..
எண்ணில் அடங்கா விண்மீன்
காண கண் கோடி வேண்டும்
பகலில் கதிரவன் ஜாலம்
இரவில் இருள் சூலும் கோலம்.
வளர்ந்து தேயும் வெண்மதி
பௌர்ணமி கண்டாலோ நிம்மதி
நீரை சுமக்கும் மேகம்
காற்றில் எங்கோ போகும்
சில நேரம் சினம் கொண்டால்
மண்ணில் மழையாகும்
மழைக்காலம் சில நாளில்
வானில் மதில் போல
வர்ணங்களால் தோரணமாய்
வானவில்லும் தொன்றும்
பல கோள்கள் ஆங்காங்கே
பகட்டாக ஒளிரும்
அது தெரியா நம் மனமோ
பல கதைகள் பேசும்
அறிவியலின் கூற்றில்
நாம் போக கூடா
இடமெனினும் கற்பனையில்
நாம் வானும் போவோம்..
வானை வலம் வருவோம்..
நாளும் நமதெண்போம்...
அன்புடன் திருவாளர் பீன்