Author Topic: தீபாவளி வருகிறது  (Read 850 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1230
  • Total likes: 4167
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
தீபாவளி வருகிறது
« on: November 04, 2023, 08:55:19 PM »
தீபாவளி வருகிறது

அம்மாவிடம் சொல்லி
பலகாரம் சில செய்ய
சொல்ல வேண்டும்

அப்பாவிடம் சொல்லி
புது துணிமணி
வாங்க சொல்லிட வேண்டும்

அண்ணாவிடம்  சொல்லி
வெடிக்கும் பட்டாசு கொஞ்சம்
தந்திட சொல்ல வேண்டும்

தங்கையிடம் சொல்லி
பாட்டு ஒன்னு பாட
அதை நாங்கள் ஒன்றாய் அமர்ந்து
கேட்டு ரசித்திட வேண்டும்

வர்ண பகவானிடம் சொல்லி
அன்று ஒரு நாள் மட்டும்
மழை வேண்டாமென
கேட்டிட வேண்டும்

நண்பர்களிடம் சொல்லி
ஓரிடம் சேர்ந்து
பேசி கழித்திட வேண்டும்

கடவுளிடம் சொல்லி
இக்கனவு
மெய்ப்பட தினம்
பிரார்த்தித்திட வேண்டும்   


தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பர்களே

***JOKER***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "