கருப்பென மேகம் சூழ
கதிரவன் எங்கோ போனான்
திடுக்கென் நானும் கண்டேன்
திகைத்து சில நேரம் நின்றேன்
ஒருத்தியும் காதல் கொண்டு
நாணத்தில் வருவதை போலே
மண்ணிடம் மோகம் கொண்டே
மழை மங்கை வந்ததை கண்டேன்.
நிலமதை முத்தமிட்டே துளிகளும்
தெறித்தது இங்கே
சில மணி துளிகளில் எல்லாம்
நிலமது ஆனது கங்கை
பாதையில் சகதியும் உண்டு
நடக்கையில் புழுதிகள் இல்லை
பார் நலன் காத்திடும் மழையோ
தீங்கெதும் தந்ததுமிலையே
மண்வளம் காத்திட அதுவும்
மாரிக்கணக்கில் வருமே
நனைந்திடும் பொழுதே மனதில்
எழுந்திடும் புதுவித சுகமே
திருமண மங்கை போல் அவளும்
மண்ணிலே வருகிற பொழுதே
இசையின் முழங்கிட இடியும்
மண் தனில் ஒலியுடன் விழுமே..
நிலமது செழித்தே ஓங்க
மழையது வருவதும் அழகு
இதையே வள்ளுவன் சொன்னான்
நீரின்றி அமையாதுலகு!!!
மண்வளம் காக்க என்றும் மழை பெற வேண்டும் நாமே..
மழை பெற வேண்டுமென்றால் மரம் தனை நடுவோம் நாமே ..
அன்புடன் திருவாளர் பீன்..