வீட்டு மூலையிலே வீற்றிருந்தேன்
கண் வெறித்து விட்டத்தை
நான் பார்த்திருந்தேன்
கூண்டு கிளி போல எந்தன் மனம்
கூச்சல் இட்டுத்தானே கத்துதடி..
தோட்டத்து மலரில் வாசமில்லை
மயில் தோகையை விரித்து காட்டவில்லை
எந்தன் மனதினை கொண்டவளே
நீ இன்றியே இயல்பாய் ஏதுமில்லை
கண்களும் நீரினில் மூழ்குதடி
உந்தன் காலடி நெஞ்சினை தாக்குதடி
எந்தன் மனதினை கொன்றவளே
நீ இன்றியே நானிங்கே நானுமில்லை...