Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 322  (Read 3203 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 322

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Sun FloweR

வானுறு மதியில் விளைந்தது உன் வதனம்..
கானுறு புலியில் தோன்றியது உன் வீரம்..

கத்தும் கடலில் முளைத்தது உன் கீர்த்தி..
முழங்கும் மேகத்தில் உதித்தது உன் புகழ்..

பாயும் நதியில் பரவியது உன் ஆற்றல்..
சீறும் சிறுத்தையில் பிறந்தது உன் ஆண்மை..

விண்ணவர் புகழும் வீரனே வாழ்க!
மண்ணவர் போற்றும் தீரனே வாழ்க!

வெற்றிகளை குவிக்கும் வேங்கையே வாழ்க!
நாட்டினைப் பாதுகாக்கும்
ஞாயிறு ஒளியே வாழ்க!

அரிதனில் அமர்ந்தாய் போற்றி!
மக்கள் மனம் தனில் புகுந்தாய் போற்றி!

வாகைகளை சூடினாய் போற்றி!
வசைபாடுவோர் முகத்தில் கரி பூசினாய் போற்றி!

அரட்டை அரங்கத்தின் வேந்தனும் நீ..
அரட்டை உலகத்தின் முதல்வனும் நீ..

உரையாடல் தளத்தின்
ராஜராஜன் நீ..
உரையாடல் வையகத்தில் சாம்ராட் நீ..
Gab எனும் பெயர் கொண்ட உன் திருநாமம் வாழிய வாழியவே...

Offline Minaaz

வீரமே ஜெயம்...

வீரனே,
வீசிடும் வில் அம்பும்,
ஏந்திடும் வாளும்
பல்லாயிரம் கதைகள் கூறும்
 மக்கள் உன் மேல் வித்திட்ட
 நம்பிக்கைதனை,,...

சினம் கொண்ட சிங்கத்தின்
 கர்ச்சனைக்கு ..
மதம் கொண்ட யானைகளும்
சரணடைந்து விடுவது...
மாசற்ற வீரத்தின்
அடையாளமல்லவா,,

வனத்தின் ராஜாவென
பட்டம் சூடிட
 வலிமையான உடலும்
 நேர்கொண்ட பார்வையும்
காரணமல்லவா,,

போர்க்களத்தில்
 போராளிகள் பல ஆயுதமேந்தி
ஆராவாரமாய் நகர்ந்தாலும்
துணிச்சலின் உச்சம்..
 இலக்கின் மேல் உள்ள தப்பாக்குறி,
ஓர் போர் வீரனின் அடையாளமாய் திகழ்வதும்..
சிங்கத்தின் ஒப்புதலேயாம்..

புலவர்கள் பல புரட்சிகள் பாடினும்,
வரலாறாய் பொதிந்தது ..
போராட்டங்கள் பலதிற்கு முகம் கொடுத்திட்டவர்களான்..

சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிட
தன்னம்பிக்கையின்
 தழம்பலிலாமையே காரணமாய்,,

கதிரவன் உதித்திட ..
கார் மேகம் தாழம் பாடிட...

தென்றல் பூவிதழ்தனைத் தூவிட...
வெற்றி மகுடம் சூடிட வா.....!!
« Last Edit: September 25, 2023, 11:35:51 PM by Minaaz »

Offline Madhurangi

சோழ குல வழி தோன்றலவன்..
அனுராதபுரம் ஆண்ட ஆண்டையவன்..
நீதி தேவனின் மறுபிறவியவன்..
மனுநீதி சோழன் எனும் எல்லாள மன்னனவன்..

வீரத்திற்கு இலக்கணமானான்..
நீதி எனும் சொல்லிற்கு வரைவிலக்கணமானான்..
புலவர்தம் படைப்புகளின் நாயகனானான்..
தமிழர்தம் வீரத்தின் அடையாளமானான்..

பாராளும் வேந்தனவன் தன்னிகரில்லா காலத்தில்
மும்மாரியும் தப்பிதமின்றி பொழிந்தது
பயிர்களும்  வளங்களும் செழித்தன
குடிகளின் வாழ்வும் மனதையும் போல..

தன்னுயிர் போல பிறஉயிர் மதிக்கும்
மனநிலை தெய்வத்திற்குரியதெனில்..
தன மகன் தேர்ச்சில்லில் சிக்கி உயிர் நீத்த கன்றின் தாய்பசுவுக்கு
நீதி வழங்க தன மகவு உயிர் கொண்ட
எல்லாளனும் தெய்வமே..

துட்டகைமுனுவுடன் இறுதி யுத்தத்தில் கஜயுத்தம் புரிந்தனன்
தள்ளாத வயதிலும் தளராத மனதுடனும்..
தன்னிகரா வீரத்தை பாரறிய செய்தான்..
வீரமரணம் கண்டு.. சொர்க்கத்தை அலங்கரிக்க சென்றான்..

ஈழ தேசம் வாழும் வரை ..
தமிழர்தம் நாவில் தமிழ் வாழும் வரை..
நின் புகழ்  வாழும் பாரினில்..
கல்மேல் எழுத்தாய் எம் மனதினில்..

Offline mandakasayam

   அலை கடலென திரண்டு வந்த அந்நியர்களை எதிர்த்து நிற்கும் உனது வீரம் தன் நாட்டை காப்பாற்றி ஆயிரம் வழிகள் இருந்தாலும் மண்டியிட்டு மண்ணிப்பு கேட்பாதா

எதிரிகள் எவராயினும் தன் படைகளின் அம்புகளுக்கு இரையாகும் வரை அந்த வீரம் வீற்றுப்போவதில்லை

நய வஞ்சகமும் ராஜ தந்திரங்களாலும் உன்னை வீழ்த்த பல சூழ்ச்சி முடிகளுக்கு  புத்திக்கூர்மையால் அகற்றுவது வீரம்!!!

எதிரிகளின் வலிமையை கண்டு பயந்து விலைபோகமல் நாட்டு மக்களுக்காக தன் உயிரை துட்சமென நினைக்கும் அரசனே
அந்நிய தேசத்தாரிடம் அடிபணியமாட்டாய்

வீரர்கள் பலர் இறந்தாலும் இரத்த வெள்ளத்தில் புரண்டாலும் நெருப்பாய் எழுந்து  உனது சிங்க முக கர்ஜனையால் சீறிப்பாய்ந்து உனது வாள் சுழற்றும் வித்தை காற்றை கிழித்து எதிரிகளை வதம் செய்வதே வீரம் ..

போர்களத்தில் பல வீயூகத்தையும் உத்வேகத்தையும் கையாளுவது  வனத்தின் ராஜாவான சிங்கத்திற்க்கு இணையானவன் அரசன்!!!!!   
« Last Edit: September 25, 2023, 01:20:03 PM by mandakasayam »

Offline Mani KL

 

படை தளபதி பேரில் அல்ல தளபதி
படையை எதிர் கொள்ளும் வீரத்தின் தளபதி
காட்டிலே ராஜா சிங்கம்
வேட்டை ஆடுவதால் ராஜா அல்ல
பயம் இல்லாமல் எதிரிகளை வேட்டை ஆடுவதால் ராஜா

படை தளபதியின் துணிச்சல்
வீரர்கள் கையில் உள்ள வாள்களை வைத்து
எதிரிகளுடன்  விளையாடும் விளையாட்டு

வீரர்களை  கொன்று  குவித்தாலும்
அதை கண்டு
அஞ்சாமல்
அசாராமல்
ஆணவத்துடன்
போர்களத்தில் போர் புரியும் வீரனே
படைக்கு தளபதி என்ற படை தளபதி
என்ற பட்டதுக்கு தகுதியான வீரன்

போர்க்களத்தில்
போர் தொடங்க சொல்லும் வெற்றியின் சப்தம்
படை தளபதியின் உயர்த்தி பிடித்த வாள்
படையை கண்டு அசாராமல் எழுந்து நின்று கர்ஜிக்கும் சிங்கத்தின் சப்தம்
உயர்த்தி பிடித்த ஆயுதங்ககுழடன்
ராஜ வம்சத்தின் பெயரை கோசத்துடன் சொல்லும் வீரர்களின் சப்தம்

போர்கள் தொடங்கி வெற்றியை நிலை நிறுத்தி
ராஜ வம்சத்தை நிலை நிறுத்துவதே
படை தளபதி

படை தளபதியின் திறமை
படை வாளின் கூர்மை
சிங்கத்தின் வெற்றியை காண துடிக்கும் பார்வை
படையை கண்டு அஞ்சாமல்
தளபதியின் கட்டளைக்காக காத்திருக்கும் வீரர்களின் பார்வை
இதுவே ராஜாவின்  வலிமை
« Last Edit: September 25, 2023, 12:30:24 PM by Mani KL »

Offline IniYa

வான் உயரும் வையகம் வாழ்த்த
எழுந்தருளிய இமயசிகரமே
படைப்பின் பிரதிபளிப்பே எம் மன்னா!

ஏழுலங்களை கட்டி ஆளும்
உன் வலிமைக்கு வான் போற்றும்
புகழுக்கு நீர் ஒருவனே எம் மன்னா!

யாம் பெற்ற பெறும் துயரத்தை
மீட்டோடுக்க வந்த பெருமனே
தேவனே தேவர்களின் தலைவனே எம் மன்னா!

செங்கோலின் நேர்மைக்கு வித்தாகும் உனது வீர மண்ணின்
பெருமையை என்னவென்று சொல்ல எம் மன்னா!

ஏதிரிகளின் வாளுக்கு நீ கொடுக்கும் பதிலடி அவன் வாழ் நாட்களை எண்ண இயலாது உன் புகழ் எம் மன்னா!

அரசவையின் நலனை எதிர் பார்க்காமல் , மக்களின் நலனை கண்ட மயிலோன் வரதனே எம்மன்னா!

போர் வீரரின் ஆயுதமே நீன் சார்ந்த
அரசவையின் ஒற்றுமை மேலோங்கி நிற்கும் வானமே எம் மன்னா!


சிங்கத்தின் பலம் நாட்டு மன்னனின் ஆட்சி பயண வெற்றிக்கு விதை செழிப்பை ஊன்றும் எம் மன்னா!

நீன் புகழ் சேர முப்படை வீர தோரணையில் வாழ வளம் பெறும் மக்களின் அன்புக்கு என்றும் அரசனே எம் மன்னா !!!

« Last Edit: September 25, 2023, 03:33:23 PM by IniYa »

Offline TiNu



என் அன்பு தமிழ் காதலனே....
===============================

கருணைநிறை பூமியே உந்தன் மேடையாக.. 
கம்பீர அரிமா உந்தன் சிம்மாசனமாக..
மதிநிறை சபைகள் உந்தன் பேரவையாக..
வசீகர எழில் கொஞ்சும் என் இனியவனே...

பலகோடி ஆண்டுகளாய் உலகை ஆளுபவனே..
பலநூறு ஞானசங்கம்(சபை) கண்ட மதியழகனே.
பல்லாயிர கோடி பதம்(வார்த்தை) கொண்ட தலைவனே..
பொன்பொலிவு கொஞ்சும் என் அன்பனே...

விண்ணை தொடும் நெடு செங்கோல் கொண்டவனே..
வையகத்தை ஒற்றை குடைக்குள் அடக்கும் வல்லவனே..       
உலக உயிர்கள் அனைத்தும் ஒன்றென நினைப்பவனே..
அன்பும் வீரமும் செழுமை கொஞ்சும் என் தீரனே..

என்றோ... எவ்வாறோ.. என்னுள் புகுந்தவனே...
எனையறியா நொடியில் என்னை ஆக்கிரமித்தவனே..
என் தாய்மொழி.. என்மதி மறக்க செய்த தமிழ்மகனே..
என் கரம் உன் பிடியில் கிடக்க தவிக்கும் என் காதலனே..

நீ இன்றி சுழலாது என் சின்னசிறு உலகமுமே..
என் உயிர், இக்கூட்டில் வாழும் காலம் மட்டும்..
உன் குடைக்கீழ் வாழும்.. கோடியில் ஒருவளாக
நானும் வாழ்த்திட வரம்  கொடு மன்னனே...

என்னை ஆளும் என் தமிழ் உணர்வுக்கு..
உயிரும் உருவமும் கொடுத்த சிற்பியே நீ வாழ்க..
       
« Last Edit: September 25, 2023, 02:56:10 PM by TiNu »

Offline சாக்ரடீஸ்

புதியதோர் புத்துணர்ச்சி
உன்னை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சில் வீரம் சுரக்கிறது
உன் பெயரை கேட்டாலே
மனம் மகிழ்கிறது
உன்னைப் பற்றி எழுத தொடங்கினால்

வாழ்ந்த காலமெல்லாம்
மக்களின் விடுதலைக்கு உழைத்த உன்னை
எப்படி கொண்டாடி தீர்ப்பது

உன் அரசியல் அடித்தட்டு மக்களுக்கானது
கீழே கிடப்போரை படிகளில் ஏற்றிட
நீ வகுத்த சூத்திரம் சிலருக்கு
எரிச்சலை தந்தது

உன் அரசியல்
எம் இனத்திற்கான அரசியல்
உன் அரசியல்
எம் உரிமைக்கான அரசியல்
உன் அரசியல்
எம் சிந்தனைக்கான அரசியல்
உன் அரசியல்
இனப் பகைவர் உணர்ந்ததைப்போல்
எம் மக்கள் உணரவில்லை
என்ற வருத்தம் உண்டு
ஆனால்
அதை பற்றி கவலை இல்லை
மாற்றம் ஒன்றே மாறாதது

மக்களின் அறியாமை
கோமாளியை கூட மன்னன் ஆக்கும்
செங்கோல் பரிசாக கிடைக்கும்
யானை மேல் அமர வைக்கும்
ஊரூராக வலம்வர செய்யும்
காவி பூசுவதோ, பிரதேசத்தை விரிவு
செய்பவன் அல்ல மன்னன்
மக்களின் புத்தியை தீட்டுபவனே மன்னன்

சமூகநீதி காவலனே
வழிகாட்டியே
வாழ்வியல்
சித்தாந்தமே 
ஞானத் தந்தையே
வாழும் காலமெல்லாம் உன்னை
கண்டு கதறியவர்கள்
நீ இல்லாத போதும் கதறுவதை நிறுத்தவில்லை
உங்களை தவிர்த்து  விட்டு
இங்கு யாரும் அரசியல் செய்ய இயலாது

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
என்று உணர்த்திய
நீயே என்றும் முடிசூடாத மாமன்னன்
#தந்தை_பெரியார்
« Last Edit: September 26, 2023, 12:35:47 PM by சாக்ரடீஸ் »

Offline Sagi2023

அரசனின் கொடையின் கீழ்
      அமர்ந்திருக்க்கும் அரிமா அறியாது...!
ஆயிரம் தன் முன்னோர்களை கொன்றுவீழ்திய
       அசுரன் என் அரசன் என்று..!
       
                              அன்பு சிநேகிதி,
                                    சகி தயாநீ.
சிநேகிதி   
        சகி தயாநீ

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1030
  • Total likes: 3402
  • Total likes: 3402
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
உடல் சிலிர்க்கிறது
பிடரி மயிர் பறக்கிறது
கூர்மையாகிறது என் காதுகள்
முரசுகள் விண்ணை எட்ட
புகழொலி போட்டியிடுகிறது
அதை கேட்டு
நரம்புகள் இறுகிக்கொள்கிறது
இடையில் அஞ்சி, நாணி நிற்கும் பெண்கள் கண்டு
முன்முறுவல் பூக்கிறார் என் தலைவன்.

சிறிது நேரத்திற்கு முன்னோ
கடும்பகையோ,பேராசையோ
பெருங்கனவோ, போர் என்று
வந்துவிட்டான்  எதிரி. 

கூரானது இவன் கண்ணோ
இல்லை இவன் கையிலுள்ள ஆயுதமோ 

புழுதிபறக்கும் நிலத்தில்
எதிர்த்து  நின்ற அத்தனை
பேரையும் ஈட்டி முனை கொண்டு
விண்ணுலகம் அனுப்பினான்

போர்க்களத்தின்
கோரத்தாண்டவத்தில்
சிதறி கிடக்கும் ரத்த சதைகளையும்
வெட்டுண்ட உடல் பாகங்களையும்
வீழ்ந்து போன
ஒவ்வொரு உயிரையும்
காண நேசிப்பவனல்ல
இவன்

கொன்றதில் இவனுக்கு
பெருமையில்லை
தன்னை நம்பிய நாட்டு மக்களை
காத்ததில் அமைதி கொள்கிறான்

நாட்டை காக்க
அவனோடு நான்
வென்றான் என் தலைவன்.

யாருக்கும் அடங்காத நான்
இவன் அன்புக்கு மயங்க
என் மேல் அமர்ந்து
என் பிடரி மயிர்  பிடிக்க
மகிழ்ச்சியில்
நானும்
கர்ஜிக்கிறேன்

வாழ்க என் அரசன்


***JOKER***
« Last Edit: September 27, 2023, 03:34:26 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline VenMaThI


முந்தி ஒரு காலத்துல
பயிற காக்குற வேலியா
மக்கள் உயிர காக்குற சாமியா
அரசர் பலபேரு இருந்தாங்களாம்....

வாடும் முல்லைக்கு தேர் கொடுத்தானாம் பாரி
நடுங்கும் மயிலுக்கு போர்வை அளித்தானாம் பேகன்
நீண்ட ஆயுள் அருளும் கனியை
ஔவைக்கு கொடுத்தானாம் அதியமான்
நீதி காக்க தன் மகனை
தேர் எற்றி கொன்றானாம் மனுநீதி சோழன்..

முடிசூடும் மன்னனவன்...

நீதிநெறி காக்கும்
கல்வி கற்றவனாம்
எதிரியை வீழ்த்தும்
வீரத்தில் தேர்ந்தவனாம்
மக்களை காக்கும்
மகேசனாய் - காவல் தெய்வமாய் இருப்பானாம்...

இப்பவும் இருக்காங்க பாருங்க
சொல்ல வார்த்தை வரலைங்க
இனிமேல் ஆட்சிக்கு வரணுமுன்னா
பழைய போர் முறை வரணும்ங்க...

இன்றைய நாட்டின் அவல நிலை

ஒருபுறம்
பாலின்றி தவிக்கும் பச்சிளங்குழந்தைகள்..
கற்பை காக்க போராடும்
மங்கையர் திலகங்கள்..
கல்வி என்பதே கனவாய்ப்போன
குழந்தை தொழிலாளர்..
வேலையின்றி வாடும்
பல்துறை பட்டதாரிகள்..

மறுபுறம்
குடும்பங்களை சிதைக்கும் மதுபான கடைகளும்..
உழைக்கும் வர்கமதை உருக்குலைக்கும்
வரி ஏய்ப்புகளும்..
இருட்டறையாய் இருக்கும் ஓட்டைகள் நிறைந்த சட்டங்களும்....
இலவசங்களில் மயங்கி தன்
வலிமை மறந்த மக்களும்...


அரசியல் என்ற பெயரில் சிலர்
ஆன்மிகம் என்ற பெயரில் சிலர்
ஆளும் கட்சி என்ற பெயரில் சிலர்
எதிர் கட்சி என்ற பெயரில் சிலர்...
மக்களை ஏய்க்கும் வித்தைகள்
பல கற்ற ஏமாற்றுக்காரர்கள்....

இந்த நிலையெல்லாம் என்று மாறுமோ
மக்களுக்கான மன்னனாய்
கறைகளற்ற கோமகனாய்
சாதி மதம் ஒழித்தாய் வாழி
சமநீதி காத்தாய் வாழி
என பார்போற்றும் வேந்தனாய்
என்றாகிலும் ஒருவன் வருவானா?????


« Last Edit: September 25, 2023, 04:14:40 PM by VenMaThI »