Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 306  (Read 3191 times)

Offline Forum

  • Administrator
  • SUPER HERO Member
  • *****
  • Posts: 1173
  • Karma: +0/-0
    • Tamil Chat - FTC Chat
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 306

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline MoGiNi

  • Full Member
  • *
  • Posts: 136
  • Karma: +0/-0
இந்த நிலாகலத்தின்
நீட்சியில்
உன் நினைவுகளை
படர விட்டிருக்கிறாய்

தொலைவில்
தொட்டுவிடலாம்
நம்பிக்கையில் நடை போட்ட
சின்னம் சிறு குழந்தையாக
உன்னை நேசித்த நாட்கள் ...

அந்த நிலவைப் போல நீ
உன்னை தொடரும்
குழந்தை போல நான் ..

நடு ராத்திரிகளின்
நிஷப்த பயங்களோடு
உன் இன்மையின்
வெறுமையின் பயணங்கள் ..

ஒரு விலகுதலில்
விளித்து மிரள்கிறது மனம்
நிமிட நகர்வுகளின்
மணித்துளிகளை
விழுங்கிச் சிரிக்கிறாய்
விரக்திகளை
பரிசளித்துவிட்டு ..

தொட முடியாத
தொலைவில் உள்ள உன்னிடம்
சிறு குழந்தையாகவே
ஆசை கொள்கிறேன்
நீ
அடைய முடியாத
ஆவல் என்பது
அறியாமலே போயிருக்க கூடாதா?

Offline Ishaa

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1327
  • Karma: +0/-2
  • Gender: Female
  • Faber est suae quisque fortunae
நண்பனுக்கு ஒரு கடிதம்

நான் தினமும் இரவில்
தனிமையில் தலையணை நனைக்கும் பொழுது
என் இருளான நேரத்தின் வெளிச்சமாய் வந்தாய்

உன்னை ரசிக்கும் நான்
என் கவலைகளை மறந்தேன்
என் வாழ்வின் ரகசியங்களை நீ மட்டுமே அறிவாய்
என் கவலையும் சந்தோசமும் உன்னிடம் மட்டுமே பகிர்வேன்
நீ என் நண்பனா இல்லை காவலனா பதில் அறியேனே...

நான் உன்னை தேடி வரும்போது ஏன் மறைகிறாய்?
உன்னை தொட வருகையில் ஏன் தொலைகிறாய்?
மாதம் ஒருமுறை வராமல் வாட்டிவதைக்கிறாய்
ஏனிந்த தண்டனை எனக்கு?
உன்னை சுற்றி இருக்கும் நட்சத்திரங்கள் கூட
அழகாய் தெரியவில்லை நீ இல்லாமல்...

வெளிச்சத்தை கடனாய் வாங்கி
என் வாழ்க்கைக்கு ஒளி கொடுத்தாய்
நான் எங்கு சென்றாலும் என்னுடன் வருகிறாய்
என் ரகசியம் அனைத்து அறிந்துள்ளாய்
மொழி ஏதும் இல்லாமல்
என்னை புரிந்து கொண்டாய்
இது போதும் எனக்கு
வேறென்ன வேண்டும்??

என் வாழ்க்கையின் உண்மையான நண்பன் நீ
உன்னைப்போல் ஒரு தன்னலமற்ற நண்பன் கிடைக்க
நான் என்ன தவம் செய்தேனோ
என் எதிர்பார்ப்பு அனைத்தும் ஒரு ஒளியால் பூர்த்தி செய்தாய்
நீ என்னுடன் இருக்கும் தைரியத்தில்
என் வாழ்க்கை பயணத்தை தொடங்குகிறேன்
இந்த நட்பு என் வாழ்நாள் தோறும் தொடரும் என நம்புறேன்...

என் வாழ்க்கையின் இருளான நேரத்தில் வெளிச்சம்

தந்தாய், தருவாய், தந்து கொண்டே இருப்பாய் என்ற நம்பிக்கையுடன்
உன் தோழி.......
« Last Edit: February 27, 2023, 08:25:56 AM by Ishaa »

Offline VenMaThI

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 416
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum


நிலவே
பிறந்த குழந்தையின்
முதல் விளையாட்டுப்பொருள் நீ
சந்தா மாமாவாகவும்
சமத்தான வெள்ளை நிலவாகவும்
அறிமுகம் செய்யப்பட்டாய் அம்மாவால்...

பூமி அருகில் இருப்பதால்
நீ பூமியின் சகோதரனாம்
பூமி எங்கள் தாய் எனில்
நீ எங்கள் மாமா தானே?

மாமா என ஆணாகவும்
அழகான மதி என பெண்ணாகவும்
மழலைக்கு அறிமுகம் ஆகும் நீ
ஒரு வேலை அர்த்தநாதீஸ்வரரோ?

எட்டாக்கனி ஆன உன்னை
எட்டிப்பிடிக்கும் ஆசை யாருக்குத்தான் இல்லை
பந்து போல் உருட்டி விளையாட
பாசமாய் என் கையில் கிடைப்பாயா??

நிலவே
மழலையின் பசி போக்க துடிக்கும்
தாயின் மந்திரம் நீ
விரிந்து கிடக்கும் வானின் மகுடம் நீ
வெளிச்சத்தின் பிறப்பிடமும் நீ
கவிஞரின் கற்பனைக்கு ஊற்றும் நீ...

நிலவே
மழலையாய் உன்னிடம் மயங்கினேன்
மங்கையாய் உன்னைப்பார்த்து வளர்ந்தேன்
மனதின் வலிகளை உன்னைக்கண்டு மறந்தேன்
இன்றும் வாழ்வின் நெறியை உன்னிடம் கற்கிறேன்

ஆம் நிலவே
வளர்ந்தாலும் தேய்ந்தாலும் தன்னம்பிக்கையை விடவில்லை
உலகத்திடம் கைமாறு எதிர் பாராமல்
இருண்ட உலகிற்கு வெளிச்சமாய் இருக்கிறாய்
அகண்டு விரிந்த வானில் தனிமையிலும் தளராமல்
தனித்துவமாய் நிற்கிறாய்

உன்னைக்கண்டு கற்றுக் கொண்டேன்
தனித்து நின்றாலும் துணிவுடன் நிற்க
இருட்டில் கிடந்தாலும் வெளிச்சமாய் திகழ
இன்பதுன்பம் எது வந்த போதும்
தன்னம்பிக்கையுடன் மட்டுமே கைகோர்க்க
கைமாறு பாராமல் என்றும் அன்பை விதைக்க.....


« Last Edit: March 02, 2023, 07:34:25 PM by VenMaThI »

Offline Sun FloweR

  • Full Member
  • *
  • Posts: 141
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
அன்னையின் இடுப்பில் அமர்ந்து
உண்ண மறுக்கும் மழலையை, சோறுண்ண வைத்த வான்நிலா...

நமக்காக மலைமீது ஏறியும், மல்லிகைப்பூ கொண்டு வந்தும்
பால்ய நாட்களை
நம்மோடு பகிர்ந்திட்ட பால்நிலா..

குதூகலமாய் கும்மாளமிட்டு ஒன்று
கூடிச் சோறு தின்ன வைத்த 
கூட்டாஞ்சோற்று நிலா..

முப்பாட்டன் காலம் முதல்
பாட்டி வடை சுட்ட கதையை
சுமந்து வரும் பழமை நிலா..

இன்றைய காதலர்க்கும் நேற்றைய காதலர்க்கும் துணையாய் அமைந்த புதுமை நிலா..

மொட்டைமாடியின் இரவின் நீட்சியில்
தனிமை விரும்பிகளுக்கு அடைக்கலம் தரும் வெண்ணிலா..

கூடி இன்புறும் காதலருக்கு
இனிமையையும்,
பிரிந்து தவிக்கும் காதலர்க்கு
வேதனையையும் அள்ளி தரும்
மாய நிலா..

மனிதனுக்கு முகங்கள் பல இருப்பது போல நிலவிற்கும் உண்டு பல முகங்கள்..
அதில் நாம் கண்டது கடுகளவு...
காணாதது கடல் அளவு ...

Offline Anusha

  • Newbie
  • *
  • Posts: 10
  • Karma: +0/-0
  • Gender: Female
  • It's me Anusha silent girl 😊😊
வாடி போய் நின்ற நான்
வானில் நிலவை பார்த்தேன்
தவித்து நின்ற எனக்கு
தனிமையில் துணையாய் சிரித்தது..

பிறை மதியாய் தேய்ந்தாலும்
பௌர்ணமியாய் ஜொலித்தாலும்
நீல நிற வானம் என்னை
நினைக்க மறக்காது..

உன்னவன் வேலை பளுவால்
உன்னை மறந்து விடுவானோ
என்று எண்ணி எண்ணி
ஏங்கி நிட்கும் உன்னை
பைத்தியம் என்று சொல்வதா?
பேதை என்று சொல்வதா?

உயிரோடு கலந்து இருக்கும்
உன்னை எண்ணாமல் இருப்பானோ ?
நினைவில் நிறைந்திருக்கும் உன்னை
நேசிக்க மறப்பானோ ?

உன்னவன் அறியும்போது
உள்மனம் தவித்தது போகுமே
அடியே பேதை பெண்ணே
அமைதியாய் இமை மூடு
உன் மனஅமைதியில்
உன்னவன் துயில் கொள்ளட்டும்..

உன் அளவில்லா நேசம்
உன்னவனுக்கு மகிழ்ச்சி அளிக்கட்டும்
நினைவுகளை நெஞ்சில் புதைத்தது விடு
நேசித்தவனை நெருங்க முடியாத நேரத்தில்
புதையலை போல் தேடி
பொக்கிஷமாய் அணைத்துக்கொள்..

நினைவுகள் தேய்ந்து போவது
போல் தோன்றினாலும்
கரைந்து காரிருளாய் நின்றாலும்
கலக்கம் கொள்ளாதே
முழு நிலவாய் பிரகாசித்து
முகம் காண ஓடி வருவான்..

உயிரோடு கலந்து இருக்கும் உன்னை
உள் மனதில் செதுக்கி இருக்கிறான்
உணர்வாக கலந்து இருக்கும் உங்கள் காதல்
அடிக்கரும்பினை போல்
என்றென்றும் சுவை தரட்டும்
தனிமையை நினைத்து தவித்து போகாதே..

காதலனின் கரம் கோர்த்து
கனவுலகில் கவலை மறந்துவிடு
ஓய்வெடுக்க நான் செல்கிறேன்
ஓய்ந்து போகாதே...
மீண்டும் சந்திப்போம்
மகிழ்ச்சியோடிரு
எனக்கூறி விடை பெற்றது நிலா ...
         
               Anusha.

Offline அனோத்

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 362
  • Karma: +0/-0
  • Gender: Male
  • இனியதோர் விதி செய்வோம் !
நிலவே ! வெண் நிலவே !

பகலெல்லாம் ஒளிந்திருந்து
பகலவன் ஓய்ந்த பின்
பருவ மங்கையாகியோர்
பவளவொளி தருகிறாய்.....

பரந்து வந்த உடுதனில்
பரவி வீசும் வெளிச்சமோர் .
பதற்றம் கொண்ட அழகினால்
வான் மதி ஆகிறாய் ...

பச்சிளம் பிள்ளைகள்
எட்டா துயரம் முயலவே
பளிச் சென்ற கவர்ச்சியால்
எட்டுத்திக்கும் மிலிர்கிறாய்....

பருவ காலம் கடந்தாலும்
உருவ மாற்றம் காண்பித்து
பிறை தேடி அலையுமோர்
பிள்ளை முகம் ஆகிறாய்...

பகலெல்லாம் உலவு கொண்ட சூரியன்!
நிலவு - நீ வரும் வேளையில்
பதுங்கி செல்லும் காட்சியே
தரணி எங்கும் இருள் ஆளுதே ....!

பந்த விளக்கொளி போலவோர்
புவி வந்த விடியல் ஆன நீ ..!
பல குழந்தை  மடி சாயவோர்
குடிவந்த மதியும் நீ ....!

பசி போக்க உனைக் காட்டி
புசித்திட்ட மங்கையிவள்
பாசம் கொண்ட நேசன் நீ...!

பரவி வீசி கதிர் விட்டு
கட்டி அணைத்த கதிரவன்
மாமன் நீ....

புரவிகள் இரை தேடி
வீடு திரும்ப ஒளிதந்த
பிறையும் நீ .....!

பிள்ளைகள் கொண்டாடும்
மந்திரச் சொல்
சந்திர மாமன் நீ ...!

பாரிலே உண்டு பலகோடி
அணிச்சம்
பாலகர் இவர் மடி சாய
நீயே என்றும் வெளிச்சம்


நிலவே ! வெண் நிலவே !

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 815
  • Karma: +0/-0
  • Silent Girl


சில நாட்கள் நீ ஏனடி வளர்கிறாய்...
சில நாட்கள் நீ ஏனடி தேய்கிறாய்...
சில நாட்கள் நீ ஏனடி மறைகிறாய்...
ஏன் இந்த நாடகமாடி.. உனக்கு..

நான் பார்த்த முதல் முகம் நீயடி..
நான் பழகிய முதல் தோழி நீயடி.. 
நான் தீண்ட துடிக்கும் முதல் உயிர் நீயடி..
ஏன் இந்த தொலை...வடி.. நமக்குள்ளே..

என் இமைக்க ஒன்று சேர மறுக்குதடி...
உனை நோக்கும் நொடிதனிலே..
பூமியில் புதைந்த  வாழைமீனுக்கு... புது நீரின்,,
ஸ்பரிசம்.. போல் என் மனமும் துள்ளுதடி.. 

உனை பார்க்கும் பொழுது எல்லாம்...
என் மனம்.. ஓர் வரம் கேட்க தோணுதடி..
என் பிரியனை.. காணாது..  அவனிடம் பேசாது..
நானும் ஜீவனில்லா கூடாகி நிற்கின்றேனடி..

அவனும் என் நினைவில்.. விழிகள் மூடாது
உனை  பார்த்து கொடுத்தானிருப்பானடி..
நீயும் நிலைக்கண்ணாடியென மாறி...
அவன் முகம் ஓர் முறையேனும் காட்டுவாயாடி..
 
என் அழகு வெண்ணிலவே.... என் ஆசை முழுநிலவே..
என் இனிக்கும் பிறைநிலவே... எனை ஈர்க்கும் மதியே...
இறுதியாக கேட்கிறேன்.. ஒரு முறை.. ஒரே ஒரு முறை...
அவரின் முகம் எனக்கு பிரதிபலிக்க மாட்டயாடி..

பொன்நிலாவே! என் மீது கோவமா?....
எல்லாம் நீயே... முதலென சொல்லியவள்...
இப்பொழுது, அவனை கேட்கின்றாளே ....
இவளே?..  பொய்தானோ?... என்று எண்ணாதடி..

அன்புக்கும் அரவணைப்புக்கும்..
ஏங்கி தவித்து நிற்குதடி..  என் மனம்..
சிறு பிள்ளையென.. உன்முன்னே நிற்கின்றேனடி..
அவன் முகம் நீ காட்டுவாய்..  என்ற நம்பிக்கையில் ...   
« Last Edit: March 02, 2023, 04:02:47 PM by TiNu »

Offline தமிழினி

  • Newbie
  • *
  • Posts: 39
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Speard Happiness & Kind..!
நிலவிற்கும் பூமிக்கும் அத்தனை தூரம் இருப்பினும்...
குறுகிய வெளிச்சமே கிட்டுகின்ற போதும்...
நிலவினை ரசிக்க மறுத்திடும் மானிடன் உண்டோ...

எட்டுகின்ற தூரத்தில் இருக்கும் உன்னையும்....
 எட்டா தூரத்தில் இருக்கும் நிலவினயும் ..
ஒருபோதும் ரசிக்க மறந்ததில்லை...!

காரணம்..

தொலைதூரம் இருந்த போதும் நிலவு சொல்லும் பாடம்...

விடியும் பொழுது உனக்கே...!

நீ சொல்லும் பாடம்.. நிலவினை போல்....

 நம் கஷ்டங்களும் ...

ஓர் நாள் (வளர்பிறை அன்று) வளர்ந்து வரும்...

ஓர் நாள் (தேய்பிறை அன்று) தேய்ந்து போகும்...

ஓர் நாள் ( அமாவாசை அன்று) காணாமல் போய் விடும்....

ஓர் நாள் (பௌர்ணமி அன்று) பிரகாசமாய் தோன்றும்...!

கேளடா  கண்ணாளனே..!
நிலவும் நம் வாழ்வும் ஒன்றே...!! :)
« Last Edit: March 02, 2023, 05:07:39 PM by HimaWari »
என்றும் அன்புடன்...❤

    தமிழினி..❤