Author Topic: ❤️❤️கொடுப்பினை ❤️❤️  (Read 1119 times)

Offline VenMaThI

❤️❤️கொடுப்பினை ❤️❤️
« on: February 09, 2023, 03:51:15 AM »


பள்ளிப்பருவமதில்
பட்டபடிப்புக்கு சென்றால் மாறும் என்றெண்ணி..

கல்லூரி காலத்தில்
கணவன் வீடு சென்றால் மாறும் என்றெண்ணி..

மணமானதும்
மகப்பேறு காலமது முடிந்தால் மாறும் என்றெண்ணி..

மகனும் மகளும் வளர்ந்தால் மாறும் என்றெண்ணி..

பாதி வாழ்க்கை கடந்தபின்னும்
 இனியாவது மாறும் என்றெண்ணி..

நாம் நினைக்கும் மாற்றம் அனைத்தும் கனவாய் போக
இந்த வாழ்க்கை தரும் மாற்றமே நிலையாய் நிற்க
ஆசைகள் அனைத்தும் அசையாமல்
கல் போல என்றும் கற்பனையாய் மட்டுமே...

மனமே இனியாகிலும் புரிந்துகொள்..
மனிதன் வாழ ஆசை மட்டும் இருப்பின்
அது அர்த்தமற்றதாகும்
ஆசை அனைத்தையும் அனுபவிக்க
சிறிதளவு கொடுப்பினையும் தேவை...

என்ன பெரிய கொடுப்பினை
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
மழலையாய் மனம் விட்டு சிரித்து மகிழ்ந்ததும் ...
நிசப்ததமான இரவில் நிம்மதியான நித்திரையும் ...








Online Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 228
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
Re: ❤️❤️கொடுப்பினை ❤️❤️
« Reply #1 on: February 10, 2023, 03:07:09 PM »
உறவே! இவ்வுலகில் மாற்றம் எனும் ஒன்றே
என்றும் மாறாதது. இந்நிலையும் மாறும் .
படைத்தவன் அறிவான் தன் படைப்பிற்கு எப்போது
எது தேவை என்பதை. உரிய நேரத்தில் உடன் வந்து சேரும்  உங்களின் தேடல் எனும் தேவை .....

வாழ்த்துக்கள் உறவே 🌹🌹🌹