கல்லறைக் காவியங்களே
காலத்தால் அழியாத ஓவியங்களே
எங்கள் மொழிக்காய்
எங்கள் இனத்துக்காய்
கல்லறை மலர்களான 
ஒவ்வொரு மாவீரருக்கும் 
எனது கண்ணீர் அஞ்சலி  
இது கல்லறை  மலர்கள் அல்ல  
காவியங்கள் 
தமிழ் மொழிக்காய் தன்னுயிர் தந்து  
தங்கள் இரத்தத்தால் காவியம் படைத்த 
தமிழ்த் தாய் பெற்றெடுத்த புதல்வர்கள் 
கனவுகளை சுமக்கும் காலத்தில் 
கைகளில் துப்பாக்கிதனை சுமந்து 
காதலித்தவர் வருவாரா என  
கண்கள் எங்கும் பருவத்தில்  
கயவர்கள் வருவார்களா என  
கண்முடாமல் காத்திருந்து  
இன்று கண்மூடித் தூங்கும்  
இந்த கல்லறை மலர்கள் 
காவிய மலர்கள் அல்லவா