Author Topic: பரிமாணங்கள்  (Read 931 times)

Offline thamilan

பரிமாணங்கள்
« on: November 23, 2022, 04:21:38 PM »

நினைவுகள்
என் இறந்தகால மாளிகைக்கு
அடிக்கடி என்னை
அழைத்துச்செல்ல பயன்படும்
வாகனம்

கனவுகள்
என் எதிர்கால வாழ்க்கை ஓவியத்தை
வர்ணம் தீட்டி
அழகுமயமாக மாற்றும்
தூரிகைகள்

இறந்தகாலம்
நான் பட்ட காயங்களை
வலியின்றி மறுபடியும்
உணர்த்திடும் மாயபிம்பம் 
நான் தொலைத்த இன்பங்களை
தூசு தட்டி
மனதை மகிழ்விக்கும்
புகைப்படக் கருவி

மரணம்
கண்களில் வலிந்து
காணாமல் போகும் கண்ணீர் துளிகள்

நாசியில் உள்சென்று வெளிவந்து
காணாமல் போகும்
சுவாசக் காற்று
நம்மை கடந்து சென்ற இளமை பருவம்