போன வார இசைத்தென்றல் நிகழ்ச்சிய சகோதரி டீனு ரொம்ப சிறப்பா தொகுத்து வழங்கினாங்க. இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல்
திரைப்படம் - பொன்னியின் செல்வன்
பாடல் - அலைக்கடல் ஆழம் 
பொன்னியின் செல்வன் படத்துல ஒவ்வொரு பாட்டும் எனக்கு ஒவ்வொருவிதமான vibe கொடுத்துச்சு. பொன்னியின் செல்வன் நாவல்ல எனக்கு ரொம்ப பிடிச்ச கதாபாத்திரம் பூங்குழலி தான். வந்ததிய தேவனும் பூங்குழலியும் சந்தித்துக்கொள்ளும் பகுதி மட்டுமே புத்தகத்தில 9 அத்தியாயம் வரும். பூங்குழலிய பத்தின பாடலை கல்கி இவ்வாறு பதிவு செஞ்சிருப்பாரு,
"அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்
நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?" 
"மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்?
வாரிதியும் அடங்கி நிற்கும் மாருதமும் தவழ்ந்து வரும் 
காரிகையாள் உளந்தனிலே காற்றுச் சுழன்றடிப்பதுமேன்?"
இதே சோகத்தை, தேடலை,  அந்த காத்திருப்பை, திரைப்படத்தில் அழகான பாடலாக மீட்டுருவாக்கம் செய்த பாடல் தான் 'அலை கடல் ஆழம். '
மணிரத்தினம் ARR கூட்டணில வைரமுத்து இல்லாதது ஒரு குறையாக இருந்தாலும் இந்த பாடலுக்கு சிவா ஆனந்த் தகுந்த நியாயம் செய்திருக்காரு.  எனக்கு பிடித்த வரிகள்
"நான் ஒரு முறை வாழ்ந்திட
மறுகரை ஏறிட
பலப்பல பிறவிகள்
கொள்வேனோ சொல்லிடு"
Antara Mandy - Whatttaa wow  ஒரு அசாமீஸ் பொண்ணு இவ்வளவு அழகா தமிழ், தெலுகு, கன்னடா, ஹிந்தின்னு எல்லா மொழிகளிலும் இதே பாடல அத்தனை அட்சுர சுத்தமா பாடியிருக்காங்க. 
மொத்ததுல வேற ஒரு vibe கொடுக்குது இந்த பாடல். இந்த பாடலை என் UC பாடல்களை கேட்டு கரிச்சு கொட்டின வன்ம கக்கிகளுக்கு சமர்ப்பிக்கிறேன். மங்களம் உண்டாகட்டும்