Author Topic: சத்தம் இல்லாமல் ஒரு யுத்தம்  (Read 1191 times)

Offline thamilan

காயம் செய்யாத ஆயுதம்
இம்சை யுத்தம்
ஆனந்தப் போர்க்களம் !

போட்டிபோட்டு யார் தொடங்கினாலும்
இறுதியில் இருவருக்குமே
வெற்றி தரும் வினோத விளையாட்டு !

நெருப்பில் நீர் ஊற்றும்
நீரில் நெருப்பு பற்றும்
நான்கு உதடுகளும்
நளினமாய் ஒரு
சாய்ந்த கோபுரம் கட்டும்!

உயிருக்குள் உயிர் சுரக்கும்
அதிசய ஊற்று
இசைக்கருவிகள் எதுமில்லாமல்
இதய நரம்புகளை மீட்டும்!

சத்தமில்லாமல் யுத்தம்
நடத்தும் நாடகம்
மந்திரமில்லா மாயாஜாலம்!

திடமா திரவமா வாயுவா
இதில் எது இது
தருபவரும் பெறுபவருக்கு
நீரின் சமநிலையை போல
முக்தி நிலைக்கு
முதலில் கொண்டு செல்லும்!
 
எங்கு ....
தொட்டாலும் சரி
இட்டாலும் சரி
பட்டாலும் சரி
இதையெல்லாம் மொத்தமாக கூட்டினால்
என்னவாய் இருக்கும்
முத்தம் தான் அது!