Author Topic: ❤️ கண்ணாளனே ❤️  (Read 928 times)

Offline VenMaThI

❤️ கண்ணாளனே ❤️
« on: July 18, 2022, 12:41:36 AM »


அம்மாவாய் என்னை நீ அரவணைக்க வேண்டும்
அப்பாவாய் செல்லமாய்
அதட்டக்கூட வேண்டும்
தோல் கொடுக்கும் தோழனாய்
தினமும் நீ வேண்டும்
கண் விழித்தால் காணும் முகம்
உனதாக வேண்டும்
காணும் கனவிலும்
நீ மட்டுமே வேண்டும்
சுவாசிப்பவை எல்லாம்
உன் மூச்சு காற்றாய் இருக்க வேண்டும்
எப்போதும் நான் சாய தேடும்
தோல் உனதாக வேண்டும்
நொடி பொழுதும் பிரியாத
உன் நிழல் நானாக வேண்டும்
செல்லமான உன் கோபத்தை
கொஞ்சி கொஞ்சி போக்க வேண்டும்
காற்றில் என் கைகள்
உன் தேகம் மட்டும் தேட வேண்டும்
நம் கை கோர்த்து கால் நோக
காலமெல்லாம் நடக்க வேண்டும்
கண்டவுடன் உச்சி முகர்ந்து
முத்தமிட வேண்டும்
காலமெல்லாம் உன்னை மட்டும்
நான் கட்டிக்கொள்ள வேண்டும்
உன்னை விட்டு பிரியும் நொடி மரணத்தை மட்டும் தழுவ வேண்டும்

கண்ணாளனே...
நான் கண்ட கனவெல்லாம்
அடுத்த ஜென்மதிலாவது நடக்க வேண்டும்


❤️❤️❤️❤️❤️