Author Topic: நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்…  (Read 2443 times)

!! AnbaY !!

  • Guest
என்னுள் காதலெனும்
செடியை நட்டாய்
இன்று மரமாகி நிற்கும் நாம் காதலை
விட்டுப்பிரிய நினைக்கும்
உன்னைத் திட்டக் கூட
மனமில்லாமல் தவிக்கிறேன்
நான் வாடி மடிந்தாலும்…
நீ வாழ்க என்று….!
நாம் ஒன்றாய் கழித்த அந்த
நினைவுகளை என்
இதயத்தில் செதுக்கி விட்டேன்
என் கனவுகளை
கவிதைகளாக வரைந்து
கண்ணீரில் கரைக்கிறேன்
யாருக்கும் தெரியாமல்
என்னுயிரில் கலந்த
உன்னை மட்டும் பிரிந்து
செல்ல நினைக்காதே……
நானில்லாமல் நீயிருப்பாய்………
ஆனால்…..
நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்
« Last Edit: July 27, 2011, 10:44:20 PM by !! AnbaY !! »

Offline Global Angel

நினைவுகளை என்
இதயத்தில் செதுக்கி விட்டேன்
என் கனவுகளை
கவிதைகளாக வரைந்து
கண்ணீரில் கரைக்கிறேன்
யாருக்கும் தெரியாமல்
என்னுயிரில் கலந்த
உன்னை மட்டும் பிரிந்து
செல்ல நினைக்காதே……
நானில்லாமல் நீயிருப்பாய்………
ஆனால்…..
நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்

rompa rompa rompa arumaya erukku anbay ..keep it up ;)