Author Topic: அடர் நிம்மதி  (Read 1059 times)

அடர் நிம்மதி
« on: December 05, 2021, 12:17:48 PM »
இனி உன்கிட்ட
பேசக் கூடாதுன்னு தான் இருந்தேன்!
ஆனா...! என்ன பண்றது?
உன்ன விட்டுட்டு
இருக்க முடியாம இருக்குது"
அப்டின்னு சொல்லிக்கிட்டு
முந்தி வந்து தானாய் பேசும்
ஒரு அன்பின் குரலில்,
தீர்ந்தே விடாத பெரும் கதகதப்பொன்றுண்டு.
"நீ என்னை இப்படி
வியப்பாக உணர்ந்து கொண்டேயிரு!" என்பதாய் எல்லாம் பேச
பலரால் முடியும்.
பேசிப் பேசி பிரம்மிக்க வைக்கும்
மனிதர்கள் பலர்,
செயல்படுத்திக் காட்டுவதில்
திணறி நிற்பார்கள்.
ஆனால்!
இந்த அன்பில் திளைத்துப் போதலை சாத்தியப்படுத்தித் தர,
சிலரால் மட்டுமே முடிகிறது.
அதற்கு நிகழ்த்திக் காட்டுதல் எனும்
மாபெரும் இயல்பினை
தன்னகத்தே ஒருவர்
கொண்டிருக்க வேண்டும்.
அதையெல்லாம் உணர்தலானது
ஒரு நெகிழ்வு.
அதுதான் இந்த அன்பில்
உயிர் கொண்டு வாழும் தன்மையை உடைந்து விடாமல் காக்கிறது.
அகங்காரமும், சளைப்பும்,
ஏளனமும், கண்டுகொள்ளாத் தன்மையும், அன்பின் கதவுகளை
சீக்கிரம் தாழிட்டுப் பூட்டிவிடும்.
"உன் உள்ளம்
நோய்வாய்ப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவேனும்,
நான் உன்னோடு இருப்பேன்"
எனும் குரல்களில்
நாம் நலமாயிருக்க முடிகிறதல்லவா? அதனை வாழ்வில்
சாத்தியமாக்கித் தரும் மனிதர்கள்,
நம் அடர் நிம்மதிக்குச் சொந்தக்காரர்கள்.......
பிழைகளோடு ஆனவன்...