Author Topic: தகனம்  (Read 972 times)

தகனம்
« on: December 03, 2021, 07:41:42 PM »
உன்னோடிருப்பவள்
உன்னால் அழுவது
உனக்குப் பெருமையா ?
ஆமாம்.
என்னோடு இருந்தவர்களில்
இந்த என்னோடு என்ற வார்த்தைக்கு
அவர்கள் என்மீதுகாட்டிய
அன்பின் நெருக்கத்தைக் கொண்டு
அடிக்கோடிட்டே சொல்கிறேன்.
என்னோடு இருந்தவர்களில்
நீ மட்டுமல்ல
அனைவருமே
அதே அன்பினை
அனுசரனையாய் படைத்தபோது
அகாலத்தில் நடைபெறும்
அகோரப் பலியிடலாய்
என்னால் எடுத்தெறியப்படுகையில்
என்ன செய்வதென்றறியாமல்
அவர்களுக்குத் தெரிந்த
ஒரே நற்செயலாக
அழுதுவிட்டுத்தான் போயிருக்கிறார்கள்
என்பதில் பெருமைதானே.
கூடுதலாக
உடனிருந்ததாலேயே
உயிர்கசந்து வெளியேறியவர்கள்
ஒருபோதும்
திரும்பவர மாட்டாதவர்களாதலால்
என் சாவுக்கும் சேர்த்தே
அழுதுவிட்டுப் போயிருக்கிறார்கள்.
பிழைகளோடு ஆனவன்...