Author Topic: !! நட்பு !!  (Read 2683 times)

!! AnbaY !!

  • Guest
!! நட்பு !!
« on: July 27, 2011, 10:37:23 PM »
விளையாட்டுக்காகவேனும் எண்ணாதே...
நாம் பிரிந்து விட்டோமோ என்று...

பிடிக்காவிட்டால் பிரிந்து போக
நம் நட்பு ஒன்றும் காதலோ, கல்யாணமோ இல்லை....
நட்பு....
இதில்... பிரிவென்ற சொல்லே என்றும் இல்லை..

நம் உள்ளத்தின் உணர்வுக்கலப்பில் பிறந்த பிள்ளைதான் நம் நட்பு..
காதலியை பிடிக்காமல் போகும்...
காதலனை பிடிக்காமல் போகும்...
மனைவியை பிடிக்காமல் போகும்...
கணவனை பிடிக்காமல் போகும்...
பிள்ளையை பிடிக்காமல் போகுமா...?

நம் நட்பு என்னும் கண்ணாடியில் என் பிம்பம் நீ...
உன் முகத்தில்  வெறுப்பு என்னும்  வேஷம் நீ காட்டினாலும்..
உன் கண்களில் நம் நட்பை நான் கண்டு கொள்வேன்....
அது வெறுப்பில்லை வெறும் கோபம் தான் என்பதையும்  நானறிவேன்...
நீ கோபித்தாலும் நானாக பேசவேண்டும் என்ற உன் ஏக்கத்தையும் நான் உணர்வேன் ....
உன் ஏக்கத்தை ரசித்து கொண்டே...உன்னை எதிர்பார்த்து காத்திருப்பேன்... உன்னோடு பேச..
நம் நட்பின் பாதையில்........
 
போதும் விளையாட்டு... உன் தவிப்பும் என்னை தவிக்க வைக்கிறது..
வேஷம் கலைத்து வா...நேசம் அழைத்து வா..

நம் நட்பு இன்னும் நெடுந்துரம் போக வேண்டி இருக்கிறது....

Offline Yousuf

Re: !! நட்பு !!
« Reply #1 on: July 27, 2011, 11:12:08 PM »
Quote
நம் நட்பு என்னும் கண்ணாடியில் என் பிம்பம் நீ...
உன் முகத்தில்  வெறுப்பு என்னும்  வேஷம் நீ காட்டினாலும்..
உன் கண்களில் நம் நட்பை நான் கண்டு கொள்வேன்....
அது வெறுப்பில்லை வெறும் கோபம் தான் என்பதையும்  நானறிவேன்...
நீ கோபித்தாலும் நானாக பேசவேண்டும் என்ற உன் ஏக்கத்தையும் நான் உணர்வேன் ....
உன் ஏக்கத்தை ரசித்து கொண்டே...உன்னை எதிர்பார்த்து காத்திருப்பேன்... உன்னோடு பேச..
நம் நட்பின் பாதையில்........

நல்ல வரிகள் அன்பே மச்சான்...!!!

உண்மையான நட்பின் ஆழத்தை எளிமையாக சொல்லி இருக்கிறீர்கள்...!!!

தொடரட்டும் உங்கள் கவிதைகள்...!!!

Offline Global Angel

Re: !! நட்பு !!
« Reply #2 on: July 27, 2011, 11:16:21 PM »
உன் முகத்தில்  வெறுப்பு என்னும்  வேஷம் நீ காட்டினாலும்..
உன் கண்களில் நம் நட்பை நான் கண்டு கொள்வேன்....

unmayana napdpukal enrum pirivathillai unarvu poorvamanavai... nalla kavithau anbay