Author Topic: காதலிக்க நேரமில்லை  (Read 872 times)

Offline SaiMithran

காதலிக்க நேரமில்லை
« on: July 10, 2021, 07:20:47 AM »
காதலிக்க நேரமில்லை......

மண்ணை நேசித்தவள்(ன்)

மரணப்படுக்கையில்

கிடக்கும் போது

உன்னைக் காதலிக்க

எனக்கு நேரமில்லை....

சொல்லிக் கேட்டதற்கே

என் கணங்கள்

வேதனையில் துடிக்க.....

பள்ளிவாசல் நின்று நீ

புன்னகைப் பூக்கொடுக்க......

பதிலுக்கு என்னால்

கண்ணீர் தான்

தரமுடியும் கண்ணே......

ஒருகாலையில் தொடரும்

வேதனைக் கணங்கள்

மறுகாலைவரை தொடர்வதும்

அதுவே மறுபடியும்

மறுபடியும் தொடர்வதுமான

சோகப் பொழுதுகளே

அவருக்கு சொந்தமாக

நான் மட்டும் உன்

நினைவில் மிதப்பதா....

உன் நினைப்பைவிட

அவர் உயிர் வதைப்புத்தான்

எனை வாட்டுதடி....

இடம்தெரியா முகாமில்

எங்கோ ஒர் மூலையில்

மண் மீட்கச் சென்றவரின்

மரண ஒலிகேட்க

நாம் மட்டும் என்ன

ஜோடிப் புறாவாய்

சேர்ந்தே கிடப்பதா......

உன் கன்னச் சிவப்பில்

சொக்கிய கணங்களை விட

மண்ணின் நிலைமறந்து

மக்கிய மரமாய் இருந்த

நினைவுதான் என்னை

காதலை வெறுக்க வைத்ததடி

காதலி உன்னையல்ல......

காதலென்றால்

உன்னுடன் தான்.....

காதலியென்றால்

நீ மட்டும் தான்.....

சுதந்திரமான மண்ணில்

என்னுடன் கை கோர்த்து

சுற்றித்திரியப் போகும்

ஒற்றை காதலி நீயடி.....

வேதனை பல சுமந்து

எம் மண்ணும்

விடுதலைக்காய்

பொறுமை காப்பது போல்.....

என் காதல் வேண்டி

நீயும் பொறுத்திருந்தால்

என் எண்ணம் போல்

உன் கன்னமெல்லாம்

தித்திக்கும் முத்தம்

நான் தரும் வரை

காத்திரு கண்ணே.......

அந்தக் கணம் வரை உன்னை

காதலிக்க நேரமில்லை.....

               SAIMITHRAN.......

Offline எஸ்கே

Re: காதலிக்க நேரமில்லை
« Reply #1 on: July 10, 2021, 07:33:12 AM »

 Hello Sai 🤗🖐️

 Welcome to Tamil poonga 💐

 Arumaiyana Varigal aazhantha Sorkal 👏

 Keep going Rocking Performance
👏👏👏




தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்