Author Topic: தாயினில் சிறந்த கோவிலும் இல்லை  (Read 1267 times)

Offline thamilan

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Karma: +0/-0
  • Gender: Male
என்னவனும் நானும்
கொண்ட காதலால்
என் கருவறை மலர்ந்தது
எனக்குள்ளே இன்னோரு உயிர்
எனக்குள்ளே ஒரு புத்துணர்ச்சி
மகிழ்ச்சியால் மலர்ச்சியால்
நெகிழ்ந்து நின்றேன் நான்.......

கருவே!
என் பெண்மையை முழுமைப்படுத்த
பிரமன் எனக்களித்திட்ட வரமா
நீ......

கண்மணியே!
உன் இதயத்துடிப்பை உணர்கிறேன் நான்
நீ வளர்பிறையாய் வளர்வதையும்
உணர்கிறேன் நான்
நீ எட்டி உதைக்கும்போதெல்லாம்
வலியை விட இன்பமே அதிகம் எனக்கு
நான் கதைப்பதையெல்லாம் நீ கேட்பதை
உன் ஒவ்வொரு அசைவையும்
உணர்த்துகிறாய் நீ எனக்கு.....

ஐயிரு திங்கள்
தவமாய் காத்திருக்கிறேன் நான்
உன்னை ஈன்றெடுக்க....
உன் அழகிய முகம் காண....
உன்னை என் இரு கரங்களில் ஏந்திட.....
உன் முதல் குரல் கேட்க......

காத்திருக்கிறேன் நான்!
உன்னை வாஞ்சையோடு அள்ளி அணைத்திட....
உன் மென்மையான ஸ்பரிசத்தை வருடிட....
உன் புன்னைகையால் நான் புன்னகைக்க....

உன்னை ஈன்றெடுக்கும் நாளதனில்
இடரேதும் வந்திடினிலும்
என்னுயிரை சுகமாய் துறந்து
உன்னுயிரை திடமாய் காத்து நிற்ப்பேன்

உனக்கெனவே உண்டு பருகி
உறக்கமிழந்த இரவுகளோடு
உந்தன் மெல்லிய அசைவுகளை ரசித்து
நீ உதைக்கும் இடமெல்லாம் தொட்டு
வருடி மகிழ்கிறேன் நான்
உன் வருகை எண்ணி

பிரசவம் பெண்ணுக்கு
எமனுடனான யுத்தம்
பிரசவத்தில் அவள் உயிர்
மதில் மேல் பூனை
மொத்தத்தில் பிரசவம்
ஒரு பெண்ணுக்கு மரண ஒத்திகை

பெண்ணினம் மட்டுமே வாங்கிய வரம்
ஆயிரம் கோடி அள்ளிக்கொடுத்தாலும்
ஆணினம் அமர முடியாத
அழகிய சிம்மாசனம்
உலகையே படைத்திட்ட 
பிரமானாலும் பெற முடியா
பேரின்ப பெருவெள்ளம்
தாய்மை!!!!!!





பெருமை தரும் பெண்ணினத்துக்கு இந்த கவிதை சமர்ப்பணம்

Offline Tejasvi

  • Full Member
  • *
  • Posts: 239
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Thamilan Alagana Varigal..

Offline thamilan

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Karma: +0/-0
  • Gender: Male
migavum nanri

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
பென்மையின் மென்மையும்
பென்மையின் மேன்மையும்
உலகுக்கு உணர்த்துவதுதான் தாய்மை..

அருமை நண்பா ஒரு பெண்ணால் எழுதக்கூடிய வ(லி)ரிகள்  அத்தனையும் மிக அழகான நடையில்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்