மூச்சுக்குள் சிக்கிய வெண்பனியாய் !
முள்ளில்லாத ரோஜாவாய் !
பார்க்கும் திசை எல்லாம் உன் பிம்பமாய் !
போகும் மேகமெல்லாம் உன் விழித்தூரலாய் !
செந்தாரை கூட்டத்தில்
செம்மீனாய் நீ தெரிகையில்...
சுற்றும் பூமி கூட உன்னை
தலை நிமிர்ந்து பார்க்குதடி...
சீவலப்பேரி ராணியாய்
சிவப்பு நிற தாவணியில்
சொடுக்கொன்று போட்டாய் ...!
என்னில் நதி புரண்டு ஓடுதடி...
குக்கூ...என்று நீ கூவுகையில்
குமரிமுனை உன் பக்கம் திரும்புதடி...
வாளில் தெரிகினற மின்னலாய்
உன் அசைவுகள் தெரியுதடி !
வாசகமே உன்னை வாசித்தாலும்
தலை சுற்றி விழத்தான் செய்யும்
ஆருயிரை ஓருயிராய் கொண்ட பெண்ணே !
என் நாடி உனக்குள் துடிப்பது தெரியவில்லையா?
பல நூறு ஜென்மங்கள் எடுக்கவில்லை...
ஒரு கோடி ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன்...
பிடிவாத மலரே...
உன் பிடியில் என்றும் நான் என்பதை மறவாதே!!!...