ஓ பிரம்மனே
தாஜ்மகாலை கட்டிய
கட்டிட தொழிலாளிகளின்
விரல்கள் வெட்டப்பட்டது போல
உனது விரல்களும் வெட்டப்பட்டதா,,,,,
காரணம்
எனது காதலியைத் தவிர -இங்கே
எவளும் அழகாகப் படைக்கப்படவே
இல்லையே
என் ஈர விழிக்குள்
ஊறிக்கிடக்கும் என் அருமையானவளே
வாள்முனையை பேனாமுனை
தோற்கடித்ததாகத்தானடி- நான்
சரித்திரம் படித்தேன்
ஆனால் உன் விழிமுனையில்
என் பேனாமுனை தோத்தது தானடி
ஆச்சரியம்
அதனால் தான்
தோல்வியை ஒத்துக்கொண்ட
என் பேனா தலை குனிந்து
உனக்கு அடிமை சாசனம் எழுதிக்கொண்டிருக்கிறது