Author Topic: வாழ்க்கை ஒரு பயணம்  (Read 767 times)

Offline சிற்பி

வாழ்க்கை ஒரு பயணம்
« on: April 10, 2021, 01:21:38 PM »
கால பயணத்தில்
எத்தனையோ திருப்பங்கள்
கருத்துகளாகவும் விருப்பங்களாகவும்
நாம் மாறுபட்டோம்

தேடல்களாக தொலைந்தோம்
பிரச்சனைகளாக வேறுபட்டோம்
இருப்பினும் இறுதிநிலை
சிவமும் சக்தியும்
இணைவதாக இருக்கட்டும்

எந்த நினைவுகளோ
எண்ணங்களோ
வாத்தைகளோ
நம் இதயத்தை தொட்ட பின்
அன்பாக மலரட்டும்...

சுயநலம் என்பது
மிகச்சிறிய உலகம்
அதில் ஒருவன் மட்டுமே
வாழமுடியும்
தனித்துவத்தை தத்துவத்தை
மாற்றி அமைப்போம்
அது தரும் சுகத்தை
வாழ்கை முழுவதும்
மதித்து நடப்போம்...


வாழ்க்கை நதி
பயத்தை
வருங்காலம்
சொல்லட்டும்
வாழும் வரை
மனிதத்தை
மனதோடு ஏற்றிவைப்போம்...
................சிற்பி....

❤சிற்பி❤