Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 254  (Read 2740 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 254
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline thamilan

பசுமை நிறைந்த நினைவுகள் - என்
பள்ளிப்பருவ நினைவுகள்
கவலைகள் அற்ற
கலிப்பான தருணங்கள் அவை
வாழ்வில் அதை போலே
இனிமையான வருவம் ஏதும் உண்டா
என்று கேட்டால்
இல்லை என்பேன் நான்

ஆசை முளைத்து
மீசை முளைக்காத
இரண்டும் கெட்டான் பருவம்
கவலை என்றால் என்னவென்றே
அறியாத தருணம்
முட்டி மோதிக்கொண்டு ஓடும்
கன்னுக்குட்டிகளாக
துள்ளித் திரியும் மான் குட்டிகளாக
வந்த அந்தப் பருவம்

பாடசாலை போவதென்றால்
அத்தனைப் பிரியம்
பாடசாலை நந்தவனமாக
அதில் சுற்றும்
பட்டாம்பூச்சிகளாக நாங்கள்

விடிந்ததும்
அரக்கப்பரக்க சாப்பிட்டு
புத்தகங்களை அள்ளிப்போட்டுக்கொண்டு
தலையை கைகள்ல கோதிக்கொண்டு
காத்திருக்கும் ஆட்டோவில் ஏறி
பாடசாலை போவது என்பது
சக்கரை பொங்கல் சாப்பிடுவது
போலிருக்கும் எங்களுக்கு

நட்பு நண்பர்கள்
இது தான் எங்கள் உலகம்
படிப்பு இரண்டாம் பட்சமே
நண்பர்கள் புடை சூழ
அரட்டை அடிப்பதும்
பொண்ணுகளை சயிட் அடிப்பதும்
உலகத்தில் இதை விட
இனிமை உண்டா என்றால்
இல்லை என்பேன் நான்
என் எதிர் பெஞ்ச் ஹனி
பார்க்காத போது பார்க்க தோன்றும்
பார்க்கும் போதோ மனசு படபடக்கும்
எனது சின்னவயது கனவுக்கு கன்னி
அழகு மோகினி   

சயன்ஸ் டீச்சர் மாயா மேடம்
கிளாஸ் வந்து விட்டால்
உடம்புக்குள்ளே ஒரு ரசாயனக் கலவை
கணக்கு டீச்சர் டீனு மேடம்
டீச்சரை கணக்கெடுக்கவே காலம் போதாது
சரித்திர டீச்சர் மேடம் நிஞ்ஜா
அவர்கள் சரித்திரமே தெரியும் எங்களுக்கு

ஆங்கில டீச்சர் ஜொள்ளு மன்னன் ஜில்லு
அவரு பாடம் எடுப்பதே பொண்ணுங்களுக்கு தான்
ஆங்கிலம் சொல்லித்தருவதை விட
பொண்ணுங்களை ஒவ்வொரு ஆங்கிளில் 
பார்த்து ரசிப்பது அவர் பொழுது போக்கு
அவரை பற்றி கரும்பலகையில்
கேலிச்சித்திரம் வரைவது எங்கள் பொழுது போக்கு

எங்கள் கிளாஸ் டீச்சர் தமிழ் டீச்சர் ஜோ
அவருடன் பேசுவதற்காகவே பாடத்தில்
அடிக்கடி சந்தேகம் வரும் எனக்கு

நான் வளர்ந்து விட்டேன் ஆனால்
இன்னும் அந்த பசுமையான நினைவு
என் மனதுக்குள் பசுமரத்து ஆணி போல
கவலைகள் வரும் போதெல்லாம்
கண்ணை மூடிக்கொள்ளுவேன்
என் பள்ளிக்காலத்தை மனதுக்குள் கொண்டுவருவேன்
கவலைகள் யாவும்
வெயில் கண்ட பனிப்போலே கரைந்து விடும்
« Last Edit: January 03, 2021, 05:22:21 PM by thamilan »

Offline Hari

பால் நிலா பருவம் தந்த ஆனந்த நினைவுகளே..
ஆண் பெண், சாதி, மதம், ஏழை, பணக்காரன் 
எதுவும்  தெரியாத   கள்ளம் கபடம்  இல்லாத   
மழலை பருவம் தந்த இனிமையான  தருணங்கள் ..

பச்சை பசும் மரத்தடியில்  வட்டம்  போட்டமர்ந்து
தோழிகள் தோழர்கள்   உணவுகளை பகிர்ந்துண்டு
பல்சுவை  இனிப்புகளை   பறித்து   சுவைத்து 
வயிறும் மனதும் நிறைந்த பொற்கால நினைவுகள்

ஆறு வயதில் தாய் தந்தையை பிரிந்து விடுதிசென்ற துயரை
எண்ணி எண்ணி   மனம் குமுறிய நாட்களவை 
தாய் தந்தை பாசத்திற்கு ஏங்கிய எனக்கு ஆறுதலாய் இருந்த 
கிருஷ்னராஜ் அண்ணனின் அன்பை எண்ணிப்  பார்க்கையில்
என் மனதில்  உண்டாகும்  நெகிழ்ச்சிக்கு அளவேது..   .

தமிழ் ஆசிரியரின் புது புது கதைகள் கேட்டு  கொண்ட ஆனந்தம்
இப்போதும் என் நெஞ்சில்  நினைவுகளாய்    பதிந்துள்ளது..
கணித ஆசிரியரின்   வகுப்புக்கு   மட்டம் போட்டு  வாங்கிய
அடிகளும் ஞாபகத்தில்  இருக்கவே  செய்கிறது.

பள்ளியில்   நடந்த ஆட்டுவிழா நாடக நினைவுகள்    ....அதில்
பஞ்ச பாண்டவர்கள் வேடமணிந்து நடித்த  சக மாணவர்ககள்
பார்த்து ரசித்த   சக  மாணவர்களின்   கைதட்டல்கள் 
திருப்பி  மீட்டுப் பார்க்கையில்  மனம் துள்ளிக்குதித்து  மகிழ்கிறது .

விடுதி உணவை உண்டு மரத்துப்போன   நாவிற்கு
மாதம் ஓரு முறை சுவையான உணவு ஊட்டிய அம்மா வின் அன்பை
எண்ணி  எண்ணி  மனம் ஆனந்தம் கொள்கிறது..
 நான் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்த என் அருமை தந்தையின்
அன்பை எண்ணி என் இரு விழிகளிலும் கண்ணீர் நிரம்புகிறது..


மழலை பருவம் தந்த மகிழ்ச்சியும்  நினைவுகளும்
இறைவன் நமக்கு தந்த மிக பெரிய வரம்..
கோடி ருபாய் கொடுத்தாலும் திரும்ப கிடைக்காதது
 பள்ளி பருவம்..தந்த  அழகிய சிம்மாசனம்

காலங்கள்  மாறலாம்   காட்சிகள்  மாறலாம் 
உலகில்  எதுவும் நிரந்தரம் இல்லாமலும் போகலாம்
சில நேரங்களில் நடந்ததை விட நினைவுகள் மட்டுமே நிரந்தரம்..
அதன் நினைவுகள் தான் அதிகமாய் சுகம் தரும்...
« Last Edit: January 04, 2021, 06:01:38 PM by Hari »

Offline MoGiNi

வாழ்வின்
சில பக்கங்களை
புரட்டும் போதெல்லாம்
எனோ மனம்
பால்யத்தின் படிகள் ஏறுகிறது ..

கள்ளம் அறிந்திடா வயது
கனவுகள் சுமந்த பொழுது
ஆண் பெண் என்ற பேதமின்றி
அடித்துப்  பிடித்த
நாட்களவை ..
சாதிகளின் பேதம்
சட்டைகளில் கூட
தெரிந்துவிடாத நாட்களவை ..

கல் அடி
அதுபட்டதுக்கே
அலறி அழுத  நண்பன் அவன்
இன்று அழுத்தமாக கிடக்கிறான் ..
ஆண்டுறுதியில்
பிரிவின் துயரில்
பிணைந்து அழுத
தோழியின் கண்களில்
இன்று சந்தித்தலின்
இன்ப அதிர்வை
எள்ளளவும் காணவில்லை ..

புன்னகையில்
உதடு பூத்திருந்த பொழுதும்
அன்பின் உலர்தலை
கண்களில் கண்டு
மனம் கலங்கியது ..

காலம் எதையும் மாற்றும்
இன்று அதை நம்புகிறேன்
காலம் எதையும் மாற்றும்
என்னை உன்னை
ஏன்  எவராயினும்
அதன் பிடியில்
மாற்றத்தினை சந்தித்தே ஆகவேண்டும் ..

பணம் என்று ஆனபின்
பால்யம் என்று ஒன்று
பாடப்புத்தகத்தில் இருந்தாக
மாறிக் கனக்கிறது ..

இறைவா
உன் படைப்பில்
இழந்துவிட்டவைக்காக
இன்னும் ஏங்கும்
என்னைப்போல் உள்ளங்கள்
இருந்தால் சொல்லு
அவர்தம் வாஞ்சையில் 
என் இருதயம்
கொஞ்சம் இளைப்பாற வேண்டும் .

Offline Raju

சிறு மொட்டின்
அலர்தலை போன்றது
அந்த நாட்களின்
ரம்மியங்கள் ..

கூழாங் கற்களும்
வைரங்களுக்கு
ஒப்பானவை ..
புளியமரத்து பூக்கள்
என சிலுத்துப் பூத்து
சில்லென்று காட்சியளித்த
சிறு பருவத்து நாட்கள் ..

வகுப்பறையின்
சுவர்கள் எங்கும்
கிறுக்கல்கள்
எத்தனை ரவிவர்மாக்கள்
எத்தனை கவிகளை
அது பார்த்திருக்கும்

எதை கற்றுக் கொண்டோம்
நினைவில்லை
ஆனால் பெற்றுக் கொண்டவை மட்டும்
பொக்கிசமாக ..
பதின்மத்தின் மலர்வுகள்
பள்ளிகளில்
ரம்மியமானவை

பாடல் ஆடல்
ஊடல் என
பரிணமித்த வளர்ச்சியில்
இறுதியில் அங்கு
வென்று நின்றது
தோழமை ஒன்றே
இறைவனும் இறங்கி
எம்மோடு எதிர் நின்று
ஆடிய உணர்வு...

உங்களுக்கும் நினைவிருக்கும் ...
« Last Edit: January 07, 2021, 12:25:39 AM by Raju »

Offline SweeTie

காலத்தின்  ஓட்டத்தில்   
கலைந்துபோன கனவுகள் '
கண்ணாடிமுன்னே   கழித்த
பல மணித்தியாலங்கள்   அவை

"பாடசாலைக்கு செல்ல எதற்கு
இத் தனை அலங்காரம்"    என்ற
அம்மாவின்  திட்டுகள் இன்னமும் 
காதில் ஒலித்தபடியே இருக்கிறது.

பருவத்தின்  கோளாறு  என்று 
புரிந்தும்  புரியாததுபோல்  நடிக்கும் 
என் தாயை  ஓரக்கண்ணால்  ரசிக்கும்
என் தந்தையின்  குறும்பு 

சிற்பி  செதுக்காத  பொற்சிலையாய் '
வெளியே  வந்த என்னை  பள்ளித்  தோழிகள்
ஆராத்தி எடுக்காத குறையாக  வரவேற்க
எங்கள் பவனி  பாடசாலை  நோக்கி நகரும் .

எங்களை  தொடரும்  முரட்டு  சிங்கிள்ஸ்
அவர்கள்  நக்கலும்  நையாண்டியும்  பின்னிசையோடு 
பாடசாலை  வாயிலை  நுழைந்ததும்   
காவி படிந்த  முப்பத்திரண்டு   பற்களுடனான
வாட்சமனின்   கூட்மோர்னிங்
ஆஹா,,,  என்ன ஒரு   பாசம்   அதில் 

வகுப்பறையில்  நிலவும்  அமைதியில்   புரியும்
ஆங்கில  டீச்சர்  மார்லின் மொன்றோ வின் வருகை
எங்க  குறும்பு பசங்க வச்ச செல்லப் பெயர்  அது
Explain  Shakespeare’s    hamlet in four lines   என
 மொன்றோ  அடி  தொண்டையில்  கொக்கரிப்பதும்
எல்லாரும் பேந்த பேந்த முழிப்பதும்  மறக்கவே முடியாது

மு. கந்தசாமி  என்ற     முட்டை கந்தசாமி   தமிழ் வாத்தியார்
கம்பராமாயணத்தை   கரைத்து  எங்கள்மேல்  ஊத்துவார்
" விடிய விடிய   படிச்சாலும்    சீதைக்கு  ராமன்  என்ன முறை னு  தெரியல"
தினமும்   கந்தசாமியின் அர்ச்சனை  சுலோகம்
பழகிப்போன  ஒன்றாகிவிட்டது

இன்டெர்வல் மணி  எப்போது அடிக்கும்
டிபன் பெட்டியை  எப்போ திறப்போம் 
,மணித்துளிகள்    ஓடாதா என் காத்திருப்போம்
சாப்பாடுகளை  பகிர்ந்து உண்பதில்   
காக்கைகளை  மிஞ்சிவிடுவோம்   

சண்டைகளையும்  சமாதானங்களையும்
தொடரும்   இறுக்கமான  பிணைப்புகள்
காலங்கள் கடந்தபின்பும்  தொடரும்  இணைப்புகள்
அழியாத  கனவுலகின்   ஞாபகச் சின்னங்கள்

பள்ளிக்காலம்  வாழ்க்கையின் பொற்கலம்
வரவுகள்  தெரியாது  செலவுகள் செய்து
வாழ்க்கையில்  இன்புற்ற   காலம் 
திருப்பி  பார்க்கையில்   ஒரு கனவு
இனிமையான   மறக்கமுடியாத கனவு
 

Offline அனோத்

பொழுது விடிஞ்சா
குயில் சத்தோ
காத நெருங்கயில........

அயல் வீடெல்லா சுப்ரபாதம்
பாடயில.......
என் கண்ணு
கடிகாரத்த பார்த்து ஏனோ
பதறுதடி தோழி........

படாருன்னு எந்திரிச்சு
என்னாச்சு ஏதாச்சு ?
இஸ்கூலுக்கு தான் லேட்
ஆச்சு.........

அட ஹோம்  ஒர்க் எல்லா
மறந்தாச்சு.........
நண்பன் துணை
ஞாபகம் வந்தாச்சு ......

இந்தாப்பா சாப்புடுப் போப்பா !!!!
அம்மா சொல்லுதுங்க....
அட சாப்பிட நேரோ எங்க ?

ஒரு சான் வயித்தக்கட்டி
ஒரு பாண் சாப்பிட்டாச்சு
ஒரு நிமிஸோ பொறுத்துக்க முடியாமதா,
பசங்க நினைவு வந்தாச்சு...

பென்சில் புத்தகோ .......
அத்தனையு சொத்தென
நித்தமு நெனச்சேனா ?

மொத்தமு இஸ்கூல் நெனப்புள.....
ரெட்டை ஜட போட்டு தான்
வருவாளே நம்ம கிளாஸ் ஆனந்தி புள்ள.....

அட ஒன்ன பாக்க மனசு துடிக்கயில
ஒன்னா படிச்ச பய எல்லாம்
ஓஹோ..! நான்...! ஆனு கிண்டல் பண்ணுறாக....

மொதல் பாடோ
அம்சமா மாறுன்னு நினச்சா.........
அம்சத்வேணி மடமோ
இங்கிலீசு பாடத்த நடத்தி
எங்க சோலி எல்லா
முடிஞ்சே போச்சுதுங்க.....

கன்னத்துல கைய வச்சு........
எண்ணத்துல ஹீரோ ரேஞ்சு  னு நினச்சு...
யுனிபோர்ம் இஸ்டைல் எல்லாம்
எக்ஸாம் போர்ம்  பில்அப்
பண்ணயில நமக்கு
கந்தன் துணையிருப்பானு நினச்சு
கடைசில நண்பன் காந்தன் துணையில
தானே பாஸ் ஆணே நானே....

இளவயசு குறும்பெல்லா
இப்போ நெனச்சாலு சுவைக்குதே

நா ரசிச்ச பொழுதெல்லா
கனவாய் ஆச்சுதே....
நனவாய் மாறுன்னு நினச்சயாசையெல்லா
கிளாஸ் ரூம் மேசையில
கிறுக்கலா ஆனதே..........

பள்ளிக்கூடோ சொல்லும் போது
மனசு தா தவிக்குது...
வில்லி னு நெனச்ச ஆசான் எல்லா
தலைவணங்க தா மனசு துடிக்குது ....

கண்ணாடி முன்னாடி நிக்கயில
தாடி மொளச்சு தா...
 தேடி செல்லும்
பள்ளி கதையெல்லா
 என் தனிமையில பாடுது.....

மச்சா மச்சி ஏ புள்ள ஏய் தம்பி
இப்பிடி கூப்பிட்டு எத்தன நாளாச்சு ?

ஒரு துணி சீருடை குடுங்கையா !!!........
பள்ளி வாசலில் நான் விட்டு வந்த
சொத்தெல்லாம் மீண்டும் மீட்டுவிட
« Last Edit: January 08, 2021, 11:00:08 AM by அனோத் »