துன்பத்தின் மறுபெயர்
காதல்
இன்பத்தின் மறுபெயர்
நட்பு
உயிர் எடுக்கும்
காதல்
உயிர் கொடுக்கும்
நட்பு
கண்ணீரின் மறுபெயர்
காதல்
புன்னகையின் மறுபெயர்
நட்பு
கணீர் சிந்த வைப்பது
காதல்
அந்த கண்ணீர் நிலத்தில் விழுமுன்னே
தாங்கிப் பிடிப்பது
நட்பு
விஷத்தின் மறுபெயர்
காதல்
அமுதத்தின் மறுபெயர்
நட்பு
நல்லவரையும் கெட்டவராக்குவது
காதல்
கெட்டவரையும் உயர்ந்தவர் ஆக்குவது
நட்பு
துரியோதனன் கெட்டவன் ஆனாலும்
கர்ணன் மேல் கொண்ட நட்பால்
கர்ணனை உயர்நதவன் ஆக்கினான்
ஒரு குடம் பாலில்
ஒரு துளி விஷம் விழுந்தாலும்
அந்த குடம்பாலும் விஷமாகும்
நட்பில்
ஒரு குடம் விஷத்தில்
ஒரு துளி நட்பு விழுந்தாலும் அந்த
விஷமும் அமிர்தமாகி விடும்
ஆயிரம் சொந்தமிருக்கலாம்
ஆயிரம் பந்தமிருக்கலாம்
அவை அனைத்தும்
நட்பு என்ற ஒரு வார்த்தையில்
சங்கமம் ஆகிவிடும்