Author Topic: இறைவனிடம் சில கேள்விகள்  (Read 1049 times)

Offline thamilan

தற்செயலாக தொலைபேசியில்       
ராங் நம்பரில் சிக்கினான்   இறைவன்

அட இறைவா
தேடினாலும் கிடைப்பதில்லை நீ
இப்படித்தான்   தேடாத போது வந்து 
சிக்கிக்கொள்கிறாய்  சில நேரம் 

பல நாட்களாக
இதயத்தை குடைந்துகொண்டிருக்கும்
சில கேள்விகளுக்கு 
பதில் சொல்லிவிட்டுப் போ 

எல்லா காரியங்களிலும் குற்றம் பிடிப்பவன் நீ   
ஏன் எங்களை இந்த
சபிக்கப்பட்ட மண்ணில்  படைத்தாய் 
ஏதேன் தோட்டத்தில் ஏன்
விலக்கப்பட்ட கனியை  வைத்தாய்?

உனக்கு எதிரியான சாத்தானை   
மனிதனுக்கு நண்பனாக
ஏன் அனுப்பி வைத்தாய்? 

இங்கே என்ன நடக்கிறது
கொஞ்சம் உற்றுப்பார்   
உனக்கு வீடு கட்டுவதத்திற்காக
உனது வீட்டையே இடிக்கிறார்களே
இந்த மூடர்கள் 

இந்த ராம் யார் ரஹிம் யார்?
பெயரில்  என்ன இருக்கிறது? 
பெயரில் நீ இருக்கிறாயா?   
 
ஆதியும் அந்தமும் நீயே என்று 
மார்தட்டிக்  கொள்பவனே     

நீ யார்
நீ அன்பு என்றால்
இந்த பகை யார்
நீ சாந்தி என்றால்
இந்த வெறி யார்
நீ ஆனந்தம் என்றால்
இந்த துயரம் யார்
நீ உண்மை என்றால்
இந்த பொய் யார்
நீ ஒளி என்றால்
இந்த இருள் யார்

உன் பெயர் சொல்லி   
எரிக்கப்படும் வீடுகள்!! 
எரியும் வீடுகள்   
உனக்கு தீபஆராதனையா? 
சிந்தப்படும் ரத்தங்கள்     
ரத்தங்களால் உனக்கு அபிஷேகமா?
நீ எந்த வேதம் நீ எந்த மதம்? 

தீமை அதிகரிக்கும் போதெல்லாம்
அவதரிப்பேன் என்கிறாயே   
இதை விடக்கொடிய  காலம் வேறுண்டா
எங்கே உன்னைக் காணவில்லை 

இன்னும் எதற்காக
பூக்களை மலர்விக்கிறாய்? 
குழந்தைகளை பூமிக்கு அனுப்புகிறாய்?

ஆலயமணி  ஓசையும் 
மசூதியின் அழைப்பொலியும்  - என்று 
ஒன்றாக சங்கமிக்கும்
கடைசியாக கேட்கிறேன்  - நீ
இந்துவா முஸ்லிமா
இல்லை கிறிஸ்தவனா?

" ராங் நம்பர்" என்ற பதிலோடு
இணைப்பு  துண்டிக்கப்பட்டது 
 
       

Offline SweeTie

Re: இறைவனிடம் சில கேள்விகள்
« Reply #1 on: December 30, 2020, 06:35:35 AM »
பக்தனே  உனது வேதனை புரிகிறது
நானும் உன்னைப்போல் வேதனையோடுதான் இருக்கிறேன்
ஏன்  இந்த மானிடரை படைத்தேனென்று 
நீ ஆயிரம் கேள்விகள்   கேட்கிறாய்  என்னிடம்
நான் யாரிடம்  கேட்பேன்   
அழகான  உலகையும்  படைத்தேன் 
விளையாட   மக்களையும் படைத்தேன்
மதம் என்ற மதம்பிடித்து  மாக்களாய் 
என் சிரம் கொய்யத் துணிந்துவிட்டான்   
 எல்லையை மீறிவிட்டான்  இயந்திரமாகிவிட்டான் 
முடியாமல்  சாத்தானை   அனுப்பியுள்ளேன்   
பொறுத்திரு  பக்தா   இதுவும் கடந்து போகும்.

 சிறப்பான கவிதை
 

Offline thamilan

Re: இறைவனிடம் சில கேள்விகள்
« Reply #2 on: December 30, 2020, 07:45:57 AM »
       
JO தெய்வமே
நீங்கள் விளையாடாத தானே உலகைப்  படைத்தார்கள்.
அது தான் நாங்கள் விளையாடிக்கொண்டிருக்கிறோம்.
நீயும் வருகிறாயா தெய்வமே. நாம சேர்ந்து விளையாடலாம்.