நீ
அகிம்சாவாதியா - இல்லை
இம்சைவாதியா - என்னை
இன்பத்தில் ஆழ்த்துவதும் நீ தான்
இம்சிப்பதும் நீ தான்
உன் கண்கள் என்னை
இம்சிக்கிறது
உன் புன்னகையோ
இன்பத்தில் ஆழ்த்துகிறது
கத்தியில்லாமல் என்னை
காயப்படுத்துவதும் நீ தான்
அந்த காயத்தை மருந்தில்லாமல்
ஆற்றுவதும் நீ தான்
ஆயுதபாணியாக உன்னையும்
நிராயுதபாணியாக என்னையும்
படைத்துவிட்டானே இரக்கமில்லா இறைவன்
உன் கொரில்லா யுத்தம்
கொடுமையானது
அறிவிப்பில்லா உன் யுத்தம்
தெரிந்தெருந்தால் தாக்குப் பிடித்தெருப்பேன்
உன் தாக்குதலுக்கு
இன்று தான் பார்த்தேன்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் நாகமாக
தென்றலுக்குள் ஒளிந்திருக்கும் புயலாக
உன்னை
இதுவரை பழிக்குப்பழி என்பது
என்னிடத்தில் இல்லை
இன்று முதல் எனது தீர்மானத்தை
திருத்திக் கொள்கிறேன்
உன்னிடம் மட்டும்
பழிக்குப் பழி
பதிலுக்குப் பதில்
இப்போது தயாராக இருக்கிறேன்
எங்கே மீண்டும் தொடரு
உன் யுத்தத்தை
எங்கே?
மீண்டும் தாக்கு
உன் இதழ்களால் என் இதழ்களில்
முத்தம் எனும் யுத்தத்தை......