வீழ்வது வெட்கம் இல்லை
வீழ்ந்து கிடப்பது தான்
காலம் பூராவும்
கால் நீட்டிப் படுத்திருப்பவன்
வீழ்வதில்லை
வாழ முயன்றால் தானே
வீழ்ச்சி
சரித்திரம்
வீரர்கள் புகழ் பாடும்
வெற்றி பெற விட்டாலும் கூட .....
கயத்தாற்றில் கட்டபொம்மன்
தூக்கில் தொங்கவிட்டாலும்
சரித்திர புத்தகத்தில் முதல் பக்கம்
ஜாக்ஸனுக்கில்லை கட்டபொம்மனுக்குத்தான்
வாட்டர்லு யுத்தத்தில்
வாளுடைந்து போனாலும்
நெப்போலியன் நெப்போலியன்தான்
சரித்திரம் நெல்சனை மறந்து விடும்
நெப்போலியனை அல்ல
எப்படியாவது
உயிர்பிழைப்பது தான் வெற்றியென்றால்
உலகில் வெற்றி பெற்றவனே கிடையாது
வெற்றி என்பது ஒரு
இலக்கைத் தொடுவதல்ல
பல இடர்களை முறியடிப்பது
சுட்டெரிக்கும் சூரியன் கூட
மாலையில் சரிவது
மீண்டும் காலையில் எழுவதத்திற்காகத்தான்
மாண்டு விழுவதற்கல்ல
நீ உயரே பறக்கும் பட்டாம்பூச்சி
காற்று நின்றதால் கலங்காதே
உயிரில் உணர்ச்சி இருக்கும் வரை பற
நடந்தவை யாவும் பலசாகும்
உலகம் உனது வசமாகும்