Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 243  (Read 2833 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 243
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline Ninja

சில வலிகள் நினைவுகளை தொடுகின்றது
சில நினைவுகள் வாதையூட்டுகிறது
வாழ்ந்திருந்தபொழுது
சாவின் கணங்களை எதிர்நோக்கியிருந்தோம்,
சாவின் விளம்பில்
வாழ்வதற்கு ஆசைப்பட்டிருந்தோம்
எல்லோரையும் போலவே

உனை பிரிந்த பின்
நீ இருந்த அறையெங்கும்
உன் சிரிப்பொலிகள் நிறைந்திருந்து
நீ விட்டுச்சென்ற ஒவ்வொரு தடயங்களும்
உன்னை நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தன
கரை நோக்கி வரும் அலை போலே
வந்து, கற்களில் மோதிடும் உன் நினைவுகள்.
தத்தளிப்புகளும், இயலாமைகளும்
சூழந்த இருளினுள்ளே காத்திருந்தேன்
மீண்டும் அந்த கரையிடமே வந்து சேர்வதற்கு

எங்கெங்கோ தனியாக் நின்றிருக்கிறேன்
ஆற்றுப் பாலங்களில்,உயரக்கட்டிடங்களில்,
மலைமுகடுகளில்,
நிற்கும் இடமெல்லாம் உன்னை
தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறேன்
மீள முடியாத இடத்தை நீ அடைந்துவிட்ட பிறகும்.
திரும்பி வராத ஒன்றுக்காக காத்திருப்பதை
வாழ்வின் பிடிப்பென சொல்வதா
நிகழாத வாழ்வு ஒன்றினை
கனவாக்கி, வாழ்ந்து வாழ்ந்து பார்க்கிறேன்.

கரைப்புரண்டோடும் வெள்ளத்தின்
தத்தளிப்புகளிடையே சிக்கிக்கொண்ட
படகென நான் இருந்தேன்
உயிர் வாழவென
எதையும் பற்றிக் கொண்டு இருக்க 
நான் விரும்பவில்லை.
இன்னும் சொல்லப்படாத வார்த்தைகள்
என்னிடம் மிச்சமிருந்தன
இன்னும் புரிந்து கொள்ளமுடியாத
கணங்கள் நம்மிடையே மீதமிருந்தன
ஆனால் காலம் யாருக்காகவும்
காத்திருப்பத்தில்லையே
நீ மௌனத்தின் எல்லையில் நின்று
எனக்காகவென காத்திருக்கிறாய்
நான் மீதமிருந்த சொற்களை
சேகரித்துக் கொண்டே இருந்தேன்.

புன்னகைகள் சொற்களாகி நின்றது
சொற்கள் மௌனமாகி நின்றது
மௌனம்  நாடகத்தின் முடிவென நின்றிருந்தது
இந்த பெரும் நாடகத்தின் மேடையிலிருந்து
நான் ஒப்பனைகளை கலைக்க வேண்டிய நேரம் வந்திருந்தது
இந்த நாடக மேடையிலிருந்து
இறங்க வேண்டியது  காலத்தின் கட்டாயமானது

எல்லாவித தடைகளையும் போராட்டங்களயும்
கடந்து- நானின்று - இறுதியாய்
உன்னை அடைந்திருந்தேன்
நீ அங்கே அமைதியாய் துயில்
கொண்டிருந்தாய்
உனதருகே உன்னதமான இடம்
ஒன்றை நானும் அடந்திருந்தேன்

உனை இன்று நான் அடைந்த பின்புதான்
கடலிடம் சேரும் நதியின்
ஆதூரத்தை நான் அடைந்திருந்தேன்.
நாம் இணைந்து
சிரித்திருந்த காலமும் அழுதிருந்த காலமும்
முடிந்து, முடிவற்று நீண்டிருப்பது,
இந்த கல்லறைக்குள் அமைதியுற்று இருக்கும்
காதல் மட்டும்தான்
« Last Edit: September 10, 2020, 08:09:21 PM by Ninja »

Offline thamilan

காதலைப் பற்றி
கதைகளிலும் கவிதைகளிலும்
எப்படியெல்லாமோ  வர்ணித்திருக்கிறார்கள்
கடலில் இறங்காதவரை
ஆழம் தெரிவதில்லை
காதலில் இறங்கும்வரை அதன்
ஆழமும் தெரிவதில்லை

கண்டேன் அவளை
கண்களும் நோக்கின
கருத்துக்களும் ஒருமித்தன
காதலில் விழுந்தோம்
கனவுகளில் விழுந்தோம்
ஓருயிர் ஈருடல் என்பதை
காதல் எங்களுக்கு உணர்த்தியது
அவளின்றி நான் இல்லை
நான் இன்றி அவளில்லை
இதை காதல் எங்களுக்கு உணர்த்தியது

காதலுக்கு எமனே பெற்றோர்கள் தானே
கொலை குற்றம் காதல் புரிவது
காதல் என்பது கூடாத வார்த்தை
அவர்களை பொறுத்தவரை

எத்தனை எதிர்ப்புகள்
எத்தனை  தடைஉத்தரவுகள் - எதுவுமே
எங்கள் காதலின் அருகில் கூட நெருங்கவில்லை
நாங்கள் பார்ப்பதே அரிதாகிவிட்டது
சேர விட மாட்டார்கள் என்று தெரிந்ததும்
சேர்ந்தே செத்திடலாம்
வாழ்வில் ஒன்று சேர முடியாவிட்டாலும்
சாவிலாவது ஒன்று சேரலாம்
இதுவே நாங்கள் எடுத்த முடிவு

ஒரு தினம் தேர்ந்தெடுத்தோம்
அவள் அவளது வீட்டிலும்
நான் எனது வீட்டிலும்
ஒரு குறித்த நேரத்தில்
நஞ்சு அருந்துவது என்று முடிவுசெய்தோம்
அந்த நல்ல நாளும் வந்தது
குறித்த நேரம் வர- சில 
மணித்தியாலங்களுக்கு முன்னமே
நான் நஞ்சை அருந்தி விட்டேன்

காரணம்
அவள் கல்லறைக்கு வரும் போது
அவளுக்காக கையில் மலர்களுடனும்
மனது நிறைய காதலுடனும்
காத்திருக்க வேண்டும் என்பது தான் 

வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

காதல் காவியம் எழுத நினைத்த நாம்
கல்லறை காவியம் எழுதலாம் வா
காதலர்களுக்கு தான் மரணம்
காதலுக்கு இல்லை
இந்த கல்லறை நமது சம்பிராஜ்யம்
இங்கே நமது காதலை எதிர்க்க
யாருமே இல்லை
நம்மை ஆசிர்வதிக்க
நம்மைப்போல் காதலர்கள் பலர்
இங்கே உறங்குகிறார்கள்

வா அன்பே வா
நமது வாழ்வை இங்கே தொடங்கலாம்
« Last Edit: September 06, 2020, 09:39:12 AM by thamilan »

Offline MoGiNi

இந்த  நாட்கள்
மிகவும் ரம்மியமானவை..
என் விடியல்களில்
உன் பெயர்
எழுதி இருந்த
நாட்கள் இவை ...

தினமொரு நாளாய்
புதிதாய் பிறந்த
மகிழ்வோடானது
இந்த நாட்கள்..
நேசித்தலின்
இறுக்கங்களோ
சில விலகுதலின்
நெகிழ்வுகளோ
மனதை பிறழ்வாக்கா
நாட்களிவை...

வாழ்வோடான
பற்றுதல்களை
கற்பித்து தந்த
பொழுதுகள் அவை...

யாரோடும் ஒத்துவராத
உடன்படாத எண்ணங்கள்
சிந்தனைகள்
ஆசைகள் தேவைகள்
அனைத்துக்குமான
வடிகாலாய் வாழும்
நாட்களிவை...

தூரங்கள் தொலைத்து
என்
தூக்கங்களோடும்
நீ
விலகாத நாட்களிவை..

ஆம்
இந்த நாட்கள் மட்டும்தான்
ரம்யமானவை..
என்னோடு நீ இருக்கிறாய் ..

உடல்களோடு தழுவுதலின்றி
உள்ளங்கள் மட்டும்
தழுவிய பொழுதும்
உனக்கும் எனக்குமான பந்தம்
உண்மையானது
உன்னதமானது ..

வாழ்தலோடான
சாபங்கள் ..
அதன் தாற்பரியங்கள்
சிலரால் புரிதல் அற்றவை

உன் விலகுதல்
புரிந்த அந்த நிமிடத்தில்
உயிர்ப் பறவை
உமிழ்ந்த எச்சிலாக
என் சடலம் ..

கண்ணீரில் கரையாத
உன் கடினத்தில்
கனத்த என் ஆத்மா
கடல் தாண்ட
நினைத்த கணத்தில்
நீ
உருவிய உன்
ஆவியில்
உறைந்து கிடந்தது .

அன்பே
கல்லறையில் கிடக்கும்
சமாதிகள்
காதலில் தோல்வி என
கண்டவர் பேசலாம்
விண்டவர் எமக்கு
இது
விண்ணுலக சொர்க்கம் என
விருந்து வைத்தா சொல்லிட முடியும் ..

உனக்குள் நானும்
எனக்கும் நீயும்
உறங்கா உறவுகள் இவை ..
உயிர் நீர்த்தும்
வாழும்
உயிர் நோயாம் காதல் ...

Offline TiNu



காதல் அழகான சொல்
அச்சொல்லுக்குள் அடங்கும்
ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்.

உடல் இரண்டாக இருந்தும்
உயிர் ஒன்றாக வாழும்
உணர்வுகளை உணர்வதே காதல்.
 
உடல் மட்டும் நானாக
அவ்வுடலின் உயிர் நீயாக
இடம்மாறி வாழ்வதுவும் காதலே.

தந்தை தந்தான் உயிரழித்து
தாய் கொடுத்த உடலழித்து
கூடும் காதல் வெற்றியா?

கல்லறையில் முடியும் காதல்
காதல் அல்ல -  அது அர்த்தம்
அறியாத அவரச முடிவு.

தம் உடலை அழித்து 
உயிர்மட்டும்  ஒன்றிணைத்தல் - கண்ணிழந்து
ஓவியம் வாங்கும் கதையே..

சமூக இடர்கள் தாண்டி
வெற்றியுடன் இணை சேர்ந்து
வாழும் நொடிகளே காதல்

காதல் அற்புதமான சொல்
அச்சொல்லுக்குள் அடங்கும்
சூட்சமம் புரிந்தவனே  வெற்றியாளன்

உண்மை காதலின் முடிவு
இருள்சூழ் கல்லறையில் அல்ல..
மனங்களைவென்று  மணமேடையில் இணைவதே..

Offline RyaN

உன் முகம் பார்த்து
என் காதலை உன்னிடம்
சொன்னபோது.
நீயும் சொல்லியிருக்கலாம்
என்னை பிடிக்க வில்லையென்று

மௌனமாக சம்மதம்
சொல்லிவிட்டு
பின்னர்  எங்கோ பார்த்தபடி
என்னை பிடிக்கவில்லை
என்றாயடி
காரணம் கேட்டால்  உன் 
குடும்பம் சம்மதிக்கவில்லை என்கிறாய்

பெண்னே...

நான் கட்டிய என் காதல்
கோட்டை   நொறுங்கிப்போனதடி
உன்னுடன் எப்படி எல்லாம் வாழவேண்டும்
என    கட்டிய  ஆசை கொட்டைகளை   
 சுக்குநூறாக்கிவிட்டாய்

நினைத்த இந்த வாழ்க்கையை...
வாழ்ந்து பார்க்க ஆசை கொன்டேன் .
முடியாமல் செய்துவிட்டாய் .
இன்று வாழ்கையையே வெறுக்கிறே னடி ...

இனியும் இந்த  வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
நமக்காக  கல்லறைகள்  காத்திருக்கின்றன
வந்துவிடு பெண்ணே  வந்துவிடு
ஒன்றாகவே  மரித்திடுவோம்.   
 
« Last Edit: September 10, 2020, 11:19:25 PM by RyaN »

Offline AgNi



ஆரம்ப காதல்   அறிமுக காதல்!
பிஞ்சு காதல் இனகவர்ச்சி காதல் !
விபரம் அறியா காதல் பள்ளி  காதல் !
விண்ணில் பறக்க நினைக்கும் விடலை காதல் !

களிப்புடன் துள்ளி குதித்து சீறும்... 
காளைப்பருவ  ஜல்லிக்கட்டு காதல் !
கண்ணோடு கண் நோக்கி கவர நினைக்கும்
மண்ணோடு மனது கரையும் கல்லூரி காதல் !

எதிர்பார்ப்புடன் பழகி   ஏமாற்றும்
என்றும் உதவா காரிய  காதல் !
வீணே உடன்  சுற்றி  போலி பாசம் காட்டி
விரும்பியது போல் நடிக்கும் வில்லங்ககாதல் !

எத்தனையோ பேரை வீழ்த்திய   காதல்கள் !
அத்தனையும் விஷம் ஏற்றிய போலி காதல்கள் !
எது உண்மை காதல் ! எது போலி என்று
நீங்கள் தீர்மானிக்கும் முன்பு ..
கல்லறைக்குள்  தஞ்சம் அடைந்து இருப்பீர்கள்   !

இதயத்தில் நுழைந்து உயிரில்  கரைந்த காதல் எல்லாம் ..
வெற்றி அடையும் ரகங்கள் இல்லை ! அது ..
என்றும் அழியா காவியம் பாட பெறும் வரங்கள் !
கல்லறை கல்வெட்டுகளை படியுங்கள் ! அவை ...
வெறும் உடலை அடைத்த சதுக்கங்கள்   இல்லை  ..
உயிர்காதலை அடை காக்கும் பிரமிடுகள் !

Offline Raju

அன்பே
அருகிருந்து
அன்போடு ஆசைமொழி கூறி
அழைத்துப் பேசி
அலுத்துச் சென்றாயா...

ஆறிலும் நூறிலும்
ஆதரவாய் நானென்று
ஆசைகளை காட்டி
ஆதரவற்று விட்டு சென்றதேன்..

இரவோடும் பாடலோடும்
இவளோடு நானென்று
இமயம் தொட்ட கற்பனைகள்
இலைகளற்ற மரமென
இயல்பிழந்து கிடக்குதடி

ஈதல் அறம்தான்
ஈருடலில் ஒர் உயிரை தீக்கு
ஈந்தது எந்த அறம்..

உனக்காக நான்
உன்னோடு நானென

ஊனுருக உயிர்கலந்து ஆசை
ஊட்டி வளர்த்துவிட்டு

எனக்கென
எல்லாமாய் இருந்த நீ
என்னைவிட்டு
ஏகாந்தம் ஆனதென்ன..


ஐயமில்லா அன்புதனில்
ஐம்புலனும் கலந்த உயிர்

ஒர் காலனவன் கண்பட்டு
ஓடி ஒழிந்தெனைசேர முடியாது

ஔடதமும் ஆக்கமின்றி உன்னை
அஃறினை ஆக்கியதே..

இன்பமென்றேன்
உன்னால் துன்பமென்றேன்
இனிமையாக சிரித்தாயே
இன்று நீ
இல்லாத வாழ்விதனை
இனியவளே வாழ்வேனோ..

வாழ்விலும் சாவிலும்...
உன் வார்த்தை தான்
இதில்
சாவிலும் நீதான் என
இதோ
உன்னோடு சங்கமிக்கிறேன்..

கல்லறை பூக்களோடு
என் களங்கமற்ற
காதலும் உனக்காக....👽

Offline Evil

உயிருக்கு உயிராக காதலித்தோம் நாங்கள் - ஆனால்
புதைத்து விட்டார்கள் எங்களை உயிருடனே

உயிர் போன பிறகும் அவளின் கரம் பிடிப்பேன்
கரம் பற்றிய பின்பும் காதலிப்போம் என்று அறியாத
மானிடர்கள் வாழும் உலகமடா இது

இருள் உலகம் என சொல்லும் நரகம் கூட
சொர்க்கம் தான் என்று அறியா மனிதனே

நீங்கள் தான் சாதி மதம் வேறுபாடு கொண்ட
நரகத்தில் வாழ்கிறீர்கள் என மறந்து போனது ஏனோ

நீங்க அறிந்து இருக்க முடியாது - இங்கு
உள்ள வாழ்வின் அமைதியை

யாரும் யாரையும் பிரிப்பவர்களும் இங்கு இல்லை
யாரும் யாரையும் அழிப்பவர்களும்  இங்கு இல்லை

இது தான் உண்மையான சொர்க்கம் - என்பதை
மறந்து விட்டு வாழ்கிறான் மானிடன்

நாம் மரிக்கும் முன்னே மணந்துகொள்ள  ஆசை கொண்டேன்       
ஆனால் நம் ஆசை நிராசை ஆனது ஏனோ

இன்றோ,  பாரடி நம் இருமனம் சேரும் திருநாளும் வந்ததடி   
நிலவின் ஒளியில், விண்மீன்கள் வாழ்த்து சொல்ல

வௌவால்கள் தன் குரலால் இசை எழுப்ப
இந்த இரவினில் நடக்கிறது நம் திருமணம்

என் அன்பே, உன் நிழலாக
தொடர ஆசைப்பட்டேன்  - ஆனால்

இன்று தான் புரிகிறது நாமோ  நிழலாக
உருமாறியது இங்கு ஏன்  வந்தோமென

எம்மாற்றம் நிகழிந்தாலும்  - நம் நேசம்
மாறாது மறையாது இந்த உலகத்தில்
« Last Edit: September 09, 2020, 10:06:26 AM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline SweeTie

கல்லறையில்  நம் உடல்கள்
உறங்கினாலும்
இதயங்கள்  உறங்காது 
இமைப்பொழுதும்   மறவாது
காற்றோடு  காற்றாக
கந்தர்வ  உலகத்தில் 
காதலில்   கழித்திருப்போம் 

காலங்கள்  கடந்து   போனாலும்
காதல் வலி தீரவில்லை
தேசங்கள்   நம்மை  பிரித்த போதும் 
நேசங்கள்    நம்மை விட்டு
போனதில்லை  \
இதயங்கள் இடம்மாறி
இம்சைகள்   பரிமாறி
இரண்டற  கலந்துவிட்ட
காதல் 

உன் மூச்சில்   நானும் 
என் மூச்சில் நீயும் 
என்றாகிய பின்னே 
யார்  நடுவில்  வந்து
யாசகம்  பேசி என்ன 
கூலிக்கு  மாரடிக்கும்
கும்பல்  இது
குறையாது   அவர் கொட்டம்
 ஒருபோதும் . 

ஜாதி மத  பேதங்கள்
நம்மை பிரிந்திடினும்
கொழுந்துவிட்டு 
எரி ந்த  நம்  காதல்    தீ
அணையவில்லை 
சரிந்துவிடும்  என்ற
நம்பிக்கை 
நம்மவர்கள்  எதிர்பார்ப்பும் 
ஓயவில்லை 
கைவிரித்து  நின்றவர்க்கு 
நாம் கொடுத்த பரிசு   
இறுதி  யாத்திரை

நானும்  நீயும்  நாமென்றாகி
நிமிடங்கள் வருடங்களாய்
காத்திருக்க 
கால'ன் அவன்  கணக்கு
கருத்தரித்து  காலூன்றி
பார்த்திருக்க 
நேரமும்  காலனும்
நிம்மதி  இழந்ததினால்
இன்று நாம் நிம்மதியாய்
கல்லறையில் துயில்
கொண்டோம். 

நம்மை  இனி  பிரிப்பதற்கும்   
யாருமில்லை
கேலி பேசி  சிரிப்பதற்கும் 
எவருமில்லை
நம்முடல்கள்  அழிந்துவிடும்
ஆன்மாக்கள்  அழியாமல்
நாம் கொண்ட காதலுடன்
அனைத்துக்கொள்ளும்