Author Topic: தமிழே தூது செல்லாயோ..  (Read 1036 times)

Offline TiNu

தமிழே தூது செல்லாயோ..
« on: August 29, 2020, 07:59:55 PM »

தமிழே தூது செல்லாயோ..
++++++++++++++++++++++

தமிழால் பிரிந்த மனதுக்கு
தமிழே!!! நீயே.. என்தூது..

அவன் மீதான எனதன்பை
நீ கொண்டு சேர்ப்பாயா..

உன் மடியினில் பிறந்து
தவழ்ந்து வளர்ந்தவன் அவன்..

நானோ உன் திருமுகம்
பார்த்து ரசித்து வளர்பவள்.. .

அவன்பால் கொண்ட அன்பால்
உதிர்த்த ஓர் சொல்லால்...

உதித்த அவன் கோப
தீயில் கருகி உருகிவிட்டேன்.

தமிழே!!!  நீயும் எனை
போல் பெண் தானே...

பெண் மனம் பெண்
அறிய மொழி வேண்டாமே...

நீயே உன் செந்தமிழால்
அவனிடம்   என்னிலை கூறாயோ  ..

தமிழே, என் மனதை
உன்னிடம் கொட்டிவிட்டேன்.

அவனின்றி உயிரற்ற உடலாய்
வீழ்ந்தவளை  உயிர்த்தெழ செய்வாயோ...

தமிழே!!! தூது செல்வாயா...
அவனோடு நானும் இணைய



Offline Jack Sparrow

Re: தமிழே தூது செல்லாயோ..
« Reply #1 on: August 30, 2020, 10:28:38 AM »
Semma chellzzzzz

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 229
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
Re: தமிழே தூது செல்லாயோ..
« Reply #2 on: August 31, 2020, 12:34:20 PM »
Tinu.  Super  vaazhthukkal💐💐💐