நிலவின் ஒளி நானே
இரவின் விழி நீயே
தனிமையில் சிரிப்பதும்
கண்டதும் முறைப்பதும்
காதலில் ஒரு சுகமடா
வருவாய் என காத்திருப்பதும்
வந்ததும் நான் ஓடி ஒளிவதும்
கண்களை சுற்றி நீ தேடுவதும்
கடைக் கண்ணால் நான் பார்ப்பதும்
காதலில் ஒரு சுகமடா
இரவுகள் தூக்கமின்றி
இணைந்து ஒன்றாய் ரசிப்பதும்
என் விழியோர கண்ணீரை
உன் கைவிரலால் துடைப்பதும்
காதலில் ஒரு சுகமடா
என் பெயரோடு கூடவே
உன் பெயர் சேர்த்தெழுதி
அடிக்கடி மனப்பாடம் செய்து
ஆனந்த வெள்ளத்தில் மூல்குவது
காதலில் ஒரு சுகமடா